• Nov 23 2024

'நீ இல்லாத நாளில் நானும் என் உயிரை இழப்பேன்...' - மனைவியின் மரண செய்தியை கேட்ட கணவனும் உயிரிழப்பு

Chithra / May 22nd 2024, 8:18 am
image

 

பாணந்துறையில் மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அன்றைய தினமே கணவன் அதிகளவில் மருந்துகளை உட்கொண்டு  உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாணந்துறை, வாலான, மங்கள மாவத்தையைச் சேர்ந்த, நெலும் கல்ஹரிகா ஹேமகாந்தி என்ற 64 வயதுடைய பெண்ணும்,

அவரது கணவரான 68 வயதுடைய மஸ்தியகே டொன் ஜயந்த குணதிலக்க என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் பெற்றோரான குறித்த தம்பதியருக்கு திருமணமாகி சுமார் நாற்பத்திரண்டு வருடங்களாகியுள்ளது.

கடந்த முப்பது வருடங்களாக இந்த பெண் நீரிழிவு, கொலஸ்ட்ரால், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

'என்றாவது ஒரு நாள் நீ இல்லாத நாளில் நானும் என் உயிரை இழப்பேன்...' என மனைவிடம் கணவர் அடிக்கடி கூறி வந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை கேட்டறிந்த கணவர்,

அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மனைவியின் பிரேத பரிசோதனை நாகொட வைத்தியசாலையிலும்,

கணவரின் பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலும் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

'நீ இல்லாத நாளில் நானும் என் உயிரை இழப்பேன்.' - மனைவியின் மரண செய்தியை கேட்ட கணவனும் உயிரிழப்பு  பாணந்துறையில் மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அன்றைய தினமே கணவன் அதிகளவில் மருந்துகளை உட்கொண்டு  உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாணந்துறை, வாலான, மங்கள மாவத்தையைச் சேர்ந்த, நெலும் கல்ஹரிகா ஹேமகாந்தி என்ற 64 வயதுடைய பெண்ணும்,அவரது கணவரான 68 வயதுடைய மஸ்தியகே டொன் ஜயந்த குணதிலக்க என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இரண்டு பிள்ளைகளின் பெற்றோரான குறித்த தம்பதியருக்கு திருமணமாகி சுமார் நாற்பத்திரண்டு வருடங்களாகியுள்ளது.கடந்த முப்பது வருடங்களாக இந்த பெண் நீரிழிவு, கொலஸ்ட்ரால், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 'என்றாவது ஒரு நாள் நீ இல்லாத நாளில் நானும் என் உயிரை இழப்பேன்.' என மனைவிடம் கணவர் அடிக்கடி கூறி வந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இந் நிலையில் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை கேட்டறிந்த கணவர்,அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த மனைவியின் பிரேத பரிசோதனை நாகொட வைத்தியசாலையிலும்,கணவரின் பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலும் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement