தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இன்று (15) நடைபெறவிருக்கும் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்ற எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று (14) உடன்பாட்டுக்கு வந்திருந்தனர்.
அதன்படி, இன்று பிற்பகல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
எனினும், இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்காவிட்டாலும், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை நிறுவும் போது எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்க எதிர்பார்க்கவில்லை என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை மொட்டு கட்சி அதிரடி அறிவிப்பு தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இன்று (15) நடைபெறவிருக்கும் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்ற எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று (14) உடன்பாட்டுக்கு வந்திருந்தனர். அதன்படி, இன்று பிற்பகல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற உள்ளது. எனினும், இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்காவிட்டாலும், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை நிறுவும் போது எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்க எதிர்பார்க்கவில்லை என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.