யாழ் நகரப் பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு இடையே ஏற்படுகின்ற நெருக்கடிகள் தொடர்பில் தீர்வு காண எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்.பேருந்து நிலையத்திற்கு களஆய்வொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெறும் போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் குறித்த பகுதியில் நிலவும் படகு சேவை நெருக்கடிகளுக்கும் தீர்வு காண்பதாகத் தெரிவித்தார்.
இதில் இலங்கைப் போக்குவரத்துச் சபை, தனியார் பேருந்து சபை,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்.பிரதேச செயலக அலுவலர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வணிகர் கழகத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இ.போ.ச - தனியார் பேருந்து சேவை நெருக்கடி -யாழ்.பேருந்து நிலையத்திற்கு எதிர்வரும் 29 இல் கள ஆய்வு யாழ் நகரப் பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு இடையே ஏற்படுகின்ற நெருக்கடிகள் தொடர்பில் தீர்வு காண எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்.பேருந்து நிலையத்திற்கு களஆய்வொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெறும் போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் குறித்த பகுதியில் நிலவும் படகு சேவை நெருக்கடிகளுக்கும் தீர்வு காண்பதாகத் தெரிவித்தார்.இதில் இலங்கைப் போக்குவரத்துச் சபை, தனியார் பேருந்து சபை,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்.பிரதேச செயலக அலுவலர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வணிகர் கழகத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.