• Apr 25 2026

புத்தளம் சித்தி விநாயகர் ஆலயத்துக்கு 650,000 ரூபா பெறுமத்தியான விக்கிரகங்கள்!

shanu / Mar 7th 2026, 11:11 pm
image

யாழ்ப்பாணம் பரமராட்சி தொண்டமான சந்நிதியான் ஆச்சிரமத்தால் புத்தளம் சித்தி விநாயகர் ஆலயத்துக்கு 650,000 ரூபா பெறுமத்தியான  விக்கிரகங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


புத்தளம் மாவட்டம் கற்பிட்டி வீதி, அம்மாதோட்டம் பள்ளி வாசல் துறையில் அமைந்துள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கே  3அடி ஆசனக்கல்லுடன் விநாயகர் சிலை 1, 1.5 அடி  ஆசனக்கல்லுடன் சிவலிங்கம் ஆசனக்கல்லுடன் 16 இஞ்சி பார்வதி விக்கிரகம்  1, 16 இஞ்சி 

வைரவர் விக்கிரகம் 1,3அடி விநாயகருக்கு ஏற்றால் போல் மூசிகம் - 1, பலிபீடம் - 1 போன்ற விக்கிரகங்கள்  650,000  ரூபா பெறுமதியில்  சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன்,  கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களூடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.


பெரும்பான்மையின மக்களும் இஸ்லாம் சமயத்தை பின்பற்றும் சமூகத்தினரும் அதிகளவில் வாழ்கின்ற இப் பிரதேசத்தில் அன்றாடம் கூலியினை தொழிலாகக் கொண்ட  40 தமிழ் இன சைவ குடும்பங்களே வசிக்கின்றனர்.


இவர்களுக்கான தனித்துவமான பண்பாட்டு மற்றும் சமூகவியல் அடையாளத்துக்குரிய வழிபாட்டிற்கான ஒரேயொரு ஆலயம் இதுவாகும்.

புத்தளம் சித்தி விநாயகர் ஆலயத்துக்கு 650,000 ரூபா பெறுமத்தியான விக்கிரகங்கள் யாழ்ப்பாணம் பரமராட்சி தொண்டமான சந்நிதியான் ஆச்சிரமத்தால் புத்தளம் சித்தி விநாயகர் ஆலயத்துக்கு 650,000 ரூபா பெறுமத்தியான  விக்கிரகங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.புத்தளம் மாவட்டம் கற்பிட்டி வீதி, அம்மாதோட்டம் பள்ளி வாசல் துறையில் அமைந்துள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கே  3அடி ஆசனக்கல்லுடன் விநாயகர் சிலை 1, 1.5 அடி  ஆசனக்கல்லுடன் சிவலிங்கம் ஆசனக்கல்லுடன் 16 இஞ்சி பார்வதி விக்கிரகம்  1, 16 இஞ்சி வைரவர் விக்கிரகம் 1,3அடி விநாயகருக்கு ஏற்றால் போல் மூசிகம் - 1, பலிபீடம் - 1 போன்ற விக்கிரகங்கள்  650,000  ரூபா பெறுமதியில்  சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன்,  கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களூடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.பெரும்பான்மையின மக்களும் இஸ்லாம் சமயத்தை பின்பற்றும் சமூகத்தினரும் அதிகளவில் வாழ்கின்ற இப் பிரதேசத்தில் அன்றாடம் கூலியினை தொழிலாகக் கொண்ட  40 தமிழ் இன சைவ குடும்பங்களே வசிக்கின்றனர்.இவர்களுக்கான தனித்துவமான பண்பாட்டு மற்றும் சமூகவியல் அடையாளத்துக்குரிய வழிபாட்டிற்கான ஒரேயொரு ஆலயம் இதுவாகும்.

Advertisement

Advertisement

Advertisement