• May 08 2026

திமுக - அதிமுக ஆட்சி அமைக்க முயன்றால் 107 எம்.எல்.ஏக்களும் பதவி விலகுவார்கள்! - தவெக அதிரடி எச்சரிக்கை!

Chithra / May 8th 2026, 7:46 am
image

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 


108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (தவெக), தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி அதிரடி நிலைப்பாட்டை எடுத்துள்ளது.


திமுக அல்லது அதிமுக முறைகேடாக ஆட்சி அமைக்க முயன்றால், தவெக சார்பில் வெற்றி பெற்றுள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகுவார்கள் எனத் அக்கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


"மக்களின் அதிகப்படியான ஆதரவைப் பெற்ற கட்சி என்பதால், ஆட்சி அமைக்க எங்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்பதில் தவெக உறுதியாக உள்ளது.


தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்தபோது, ஆட்சி அமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தைச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது தவெகவிற்கு பெரும்பான்மைக்கு இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.


காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வழங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இடதுசாரிகள் மற்றும் சிறிய கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தால் நீதிமன்றத்தை அணுகவும் தவெக திட்டமிட்டுள்ளது.


திமுக கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அவசர முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

"மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்ப்பதே எங்களின் நோக்கம்" எனத் தெரிவித்துள்ள திமுக, தனது எம்.எல்.ஏக்களை மே 10 வரை சென்னையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தவெகவுடன் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இருப்பினும், திமுகவின் வெளி ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகும் ஒரு 'மாற்றுத் திட்டம்' குறித்து ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


விஜய் ஆட்சிக்கு வந்தால் அவர் எம்.ஜி.ஆர் போல நீண்டகால ஆதிக்கம் செலுத்துவார் என்ற அச்சம் திராவிடக் கட்சிகளிடையே நிலவுவதே இந்த அரசியல் முட்டுக்கட்டைக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 

திமுக - அதிமுக ஆட்சி அமைக்க முயன்றால் 107 எம்.எல்.ஏக்களும் பதவி விலகுவார்கள் - தவெக அதிரடி எச்சரிக்கை தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (தவெக), தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி அதிரடி நிலைப்பாட்டை எடுத்துள்ளது.திமுக அல்லது அதிமுக முறைகேடாக ஆட்சி அமைக்க முயன்றால், தவெக சார்பில் வெற்றி பெற்றுள்ள அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகுவார்கள் எனத் அக்கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "மக்களின் அதிகப்படியான ஆதரவைப் பெற்ற கட்சி என்பதால், ஆட்சி அமைக்க எங்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்பதில் தவெக உறுதியாக உள்ளது.தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்தபோது, ஆட்சி அமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தைச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது தவெகவிற்கு பெரும்பான்மைக்கு இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வழங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இடதுசாரிகள் மற்றும் சிறிய கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தால் நீதிமன்றத்தை அணுகவும் தவெக திட்டமிட்டுள்ளது.திமுக கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அவசர முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. "மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்ப்பதே எங்களின் நோக்கம்" எனத் தெரிவித்துள்ள திமுக, தனது எம்.எல்.ஏக்களை மே 10 வரை சென்னையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தவெகவுடன் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திமுகவின் வெளி ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகும் ஒரு 'மாற்றுத் திட்டம்' குறித்து ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.விஜய் ஆட்சிக்கு வந்தால் அவர் எம்.ஜி.ஆர் போல நீண்டகால ஆதிக்கம் செலுத்துவார் என்ற அச்சம் திராவிடக் கட்சிகளிடையே நிலவுவதே இந்த அரசியல் முட்டுக்கட்டைக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement