வரலாற்றின் ஒரு காலப்பகுதியில் மும்முனைகளிலும் மனித கொலைகள் மிக இலகுவாக இடம்பெற்றன. பெரும் சவால்களின் மத்தியிலேயே உயிரை பாதுகாத்துக்கொண்டேன்.
கண்களில் தென்பட்டிருந்தால் என்னையும் கொலை செய்திருப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
1988, 1989ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தம் பாரதூரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
மறுபுறம் மக்கள் விடுதலை முன்னணி மக்களை கொன்றொழித்தது.
இன்னொருபுறம், இந்த இரு தரப்பினரையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அவர்களும் மக்களை கொன்றொழித்தார்கள். மும்முனைகளும் தீவிரமாக இருந்தன.
அரசியல்வாதி என்ற அடிப்படையில் அந்தக் காலகட்டத்தில், பெரும் கஷ்டங்களின் மத்தியிலேயே எனது உயிரை பாதுகாத்துக்கொண்டேன்.
1989ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் எனது மனைவி, இரு பிள்ளைகளுடன் கம்பஹா பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்தேன்.
அதன்போது நான் அவர்களின் கண்களில் தென்பட்டிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள்.
தேர்தலில் பெரும் முயற்சிகளை எடுத்திருந்தேன். ரோஹண விஜயவீர மரணித்ததன் பின்னரே பொலன்னறுவைக்குச் சென்றேன்.
அண்மையில் இடம்பெற்ற அரகலய போராட்டம் தோல்வியை சந்திக்க காரணம் யார்?
நாட்டில் பட்டினியையும் பொருளாதார நெருக்கடியையும் ராஜபக்ஷ குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரே காரணம்.
நாட்டிலிருந்து தப்பிச் சென்றவர்களும், பொறுப்புகளிலிருந்து தப்பிச் சென்றவர்களும், உயர் நீதிமன்றத்தினால் எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டவர்களும் மீண்டும் அவர்களின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குகிறார்கள் என்றால் அதுதொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார்.
கண்களில் தென்பட்டிருந்தால் என்னையும் கொலை செய்திருப்பார்கள். தலைமறைவாகவே வாழ்ந்தேன். - மைத்திரி அதிர்ச்சித் தகவல் வரலாற்றின் ஒரு காலப்பகுதியில் மும்முனைகளிலும் மனித கொலைகள் மிக இலகுவாக இடம்பெற்றன. பெரும் சவால்களின் மத்தியிலேயே உயிரை பாதுகாத்துக்கொண்டேன். கண்களில் தென்பட்டிருந்தால் என்னையும் கொலை செய்திருப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.1988, 1989ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தம் பாரதூரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தது. மறுபுறம் மக்கள் விடுதலை முன்னணி மக்களை கொன்றொழித்தது. இன்னொருபுறம், இந்த இரு தரப்பினரையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அவர்களும் மக்களை கொன்றொழித்தார்கள். மும்முனைகளும் தீவிரமாக இருந்தன.அரசியல்வாதி என்ற அடிப்படையில் அந்தக் காலகட்டத்தில், பெரும் கஷ்டங்களின் மத்தியிலேயே எனது உயிரை பாதுகாத்துக்கொண்டேன். 1989ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் எனது மனைவி, இரு பிள்ளைகளுடன் கம்பஹா பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்தேன். அதன்போது நான் அவர்களின் கண்களில் தென்பட்டிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள்.தேர்தலில் பெரும் முயற்சிகளை எடுத்திருந்தேன். ரோஹண விஜயவீர மரணித்ததன் பின்னரே பொலன்னறுவைக்குச் சென்றேன். அண்மையில் இடம்பெற்ற அரகலய போராட்டம் தோல்வியை சந்திக்க காரணம் யார் நாட்டில் பட்டினியையும் பொருளாதார நெருக்கடியையும் ராஜபக்ஷ குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரே காரணம்.நாட்டிலிருந்து தப்பிச் சென்றவர்களும், பொறுப்புகளிலிருந்து தப்பிச் சென்றவர்களும், உயர் நீதிமன்றத்தினால் எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டவர்களும் மீண்டும் அவர்களின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குகிறார்கள் என்றால் அதுதொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார்.