• Nov 26 2024

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் IMFன் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும்! ரோசி கருத்து

Chithra / Nov 6th 2024, 9:03 am
image

 

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய ரோசி சேனநாயக்க, 

முன்னாள் அரசாங்கத்தின் கீழ், இலங்கை அதன் நெருக்கடியிலிருந்து மீட்கப்பட்டதாகவும், முழுமையாக மீள இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் நிறுவப்பட்டு, அரசாங்கம் பாதீட்டை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இப்போதைக்கு சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணை தாமதமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நன்மை பயக்கும் நிபந்தனைகளை விதித்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வருமானத்தை அதிகரிக்கவும், செலவினங்களைக் குறைக்கவும், ஊழலை ஒழிக்கவும் சர்வதேச நாணய நிதியம் கோருகிறது நல்லாட்சி மூலம் தேசத்தை அபிவிருத்தி செய்ய உதவும் ஒரு முறையான செயல்முறையை அந்த நிதியம் கோடிட்டு காட்டியுள்ளதாகவும் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதமாகியும் என்ன சாதித்துள்ளது என கேள்வி எழுப்பிய ரோசி சேனாநாயக்க, அவர்கள் தெரிவு செய்யப்படுவதற்காக பொய்யான வாக்குறுதிகளையே வழங்கியுள்ளனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.  

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் IMFன் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும் ரோசி கருத்து  ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய ரோசி சேனநாயக்க, முன்னாள் அரசாங்கத்தின் கீழ், இலங்கை அதன் நெருக்கடியிலிருந்து மீட்கப்பட்டதாகவும், முழுமையாக மீள இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளார்.புதிய நாடாளுமன்றம் நிறுவப்பட்டு, அரசாங்கம் பாதீட்டை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இப்போதைக்கு சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணை தாமதமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு நன்மை பயக்கும் நிபந்தனைகளை விதித்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.வருமானத்தை அதிகரிக்கவும், செலவினங்களைக் குறைக்கவும், ஊழலை ஒழிக்கவும் சர்வதேச நாணய நிதியம் கோருகிறது நல்லாட்சி மூலம் தேசத்தை அபிவிருத்தி செய்ய உதவும் ஒரு முறையான செயல்முறையை அந்த நிதியம் கோடிட்டு காட்டியுள்ளதாகவும் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதமாகியும் என்ன சாதித்துள்ளது என கேள்வி எழுப்பிய ரோசி சேனாநாயக்க, அவர்கள் தெரிவு செய்யப்படுவதற்காக பொய்யான வாக்குறுதிகளையே வழங்கியுள்ளனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement