• Jan 23 2025

கோதுமை மாவின் விலையை குறைத்தால் பாண் 100 ரூபா! – அமைச்சரிடம் தெரிவித்த பேக்கரி உரிமையாளர்கள்

Chithra / Jan 15th 2025, 1:28 pm
image


 

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டால், பாண் ஒன்றினை 100 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நேற்று முன்தினம்  நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

டொலரின் மதிப்பு குறைந்திருந்தாலும், ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது.

ஒரு கிலோவுக்கு 45 ரூபா வரி குறைக்கப்பட்டு, கோதுமை மாவை இறக்குமதி செய்ய எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கினால், நிறுவனங்களின் ஏகபோக உரிமை உடைக்கப்படும்.

மேலும், உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ வெண்ணெய் 900 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

இதேவேளை, பாணின் விலை உயர்வு காரணமாக பாண் நுகர்வு குறைந்துள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோதுமை மாவு மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலையை குறைத்தால் பாண் 100 ரூபா – அமைச்சரிடம் தெரிவித்த பேக்கரி உரிமையாளர்கள்  ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டால், பாண் ஒன்றினை 100 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நேற்று முன்தினம்  நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.டொலரின் மதிப்பு குறைந்திருந்தாலும், ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது.ஒரு கிலோவுக்கு 45 ரூபா வரி குறைக்கப்பட்டு, கோதுமை மாவை இறக்குமதி செய்ய எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கினால், நிறுவனங்களின் ஏகபோக உரிமை உடைக்கப்படும்.மேலும், உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ வெண்ணெய் 900 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.இதேவேளை, பாணின் விலை உயர்வு காரணமாக பாண் நுகர்வு குறைந்துள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோதுமை மாவு மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now