• Oct 01 2024

இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் பாரிய போராட்டம்!SamugamMedia

Sharmi / Mar 17th 2023, 12:21 pm
image

Advertisement

அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக் கடற்பரப்பை இந்தியா மீனவர்களுக்குக் குத்தகைக்கு வழங்கவுள்ளதாக முடிவுகளை  அறிவித்திருந்தார்.
இவ்வாறு கடற்பரப்பை வழங்குவதனால் அனைவருக்கும் புரதக் குறைபாடு உட்பட உணவு உற்பத்திக்கே பாரிய பாதிப்பு ஏற்படும். இதற்கெதிரான போராட்டங்களுக்கு இலங்கையிலுள்ள அனைத்து தொழில் அமைப்புக்களும் எம்முடன் இணைந்து  கைகொடுக்க வேண்டும்.  இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் தக்க பதிலை அறிவிக்கவில்லையாயின் நாங்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தற்காலிக தலைவர் அ. பாலசுரேஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமக்கு தேசிய மீனவ இயக்கமானது தொடர்ந்தும் ஆதரவளித்து வழிநடத்தி வருகின்றது. இவ் அமைப்பு இல்லையனில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  அதே போல் இப் பிரச்சினைகள் தொடர்பாக எமது பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் தொண்டு நிறுவனங்களிடமும் முறையிட்டுள்ளோம்.

எனவே இப் பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பு உரிய பதிலைத் தராவிடின் பாரிய போராட்டமொன்றைச் செய்யவுள்ளோம் அதற்கு அனைத்து அமைப்புக்களும் பூரண ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் பாரிய போராட்டம்SamugamMedia அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக் கடற்பரப்பை இந்தியா மீனவர்களுக்குக் குத்தகைக்கு வழங்கவுள்ளதாக முடிவுகளை  அறிவித்திருந்தார். இவ்வாறு கடற்பரப்பை வழங்குவதனால் அனைவருக்கும் புரதக் குறைபாடு உட்பட உணவு உற்பத்திக்கே பாரிய பாதிப்பு ஏற்படும். இதற்கெதிரான போராட்டங்களுக்கு இலங்கையிலுள்ள அனைத்து தொழில் அமைப்புக்களும் எம்முடன் இணைந்து  கைகொடுக்க வேண்டும்.  இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் தக்க பதிலை அறிவிக்கவில்லையாயின் நாங்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தற்காலிக தலைவர் அ. பாலசுரேஸ் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எமக்கு தேசிய மீனவ இயக்கமானது தொடர்ந்தும் ஆதரவளித்து வழிநடத்தி வருகின்றது. இவ் அமைப்பு இல்லையனில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  அதே போல் இப் பிரச்சினைகள் தொடர்பாக எமது பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் தொண்டு நிறுவனங்களிடமும் முறையிட்டுள்ளோம்.எனவே இப் பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பு உரிய பதிலைத் தராவிடின் பாரிய போராட்டமொன்றைச் செய்யவுள்ளோம் அதற்கு அனைத்து அமைப்புக்களும் பூரண ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement