• Nov 14 2024

தமிழ் மக்கள் பிரிந்து செயற்பட்டால் வருங்காலத்தில் தலைகுனிவோடு வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குதள்ளப்படுவோம்! பாரத் அருள்சாமி தெரிவிப்பு

Chithra / Nov 10th 2024, 3:02 pm
image

 

“சமூகம், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இவற்றை முறியடிப்பதற்கு ஒற்றுமையே முக்கியம். பொருளாதார ரீதியாக இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நாம், இந்தத் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று நீங்கள் அறிவீர்கள். கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் வகையிலும், அதனை வென்றெடுக்கும் வகையிலும் இந்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டி கெலாபொக்க பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் பாரத் மேலும் கூறியவை வருமாறு,

இந்தத் தேர்தலில் நாங்கள் தொலைபேசி சின்னத்தில் களமிறங்கியுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் ஒத்துழைப்பு மாத்திரமின்றி, நீங்களும் பங்குதாரர்களாக களத்தில்நின்று பிரசாரப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே, நமது வெற்றி பலமடையும். 

பிரிந்துவிடுவோமேயானால் வருங்காலத்தில் தலைகுனிவோடு வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே, வாக்காளர்களாகிய நீங்கள் யதார்த்தத்தைப் புரிந்து, ஒன்றுபட்டு, எமக்கு வெற்றியைப் பெற்றுத்தாருங்கள்.

நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ, மாகாண சபை உறுப்பினராகவோ, பிரதேச சபை உறுப்பினராகவோ அதாவது எந்தவிதமான அரசியல் பதவிகளும் இல்லாமல் கண்டி மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வேலைத்திட்டங்களையும் செய்துக் கொடுத்துள்ளேன்.

இன அடையாளம், வீடமைப்பு திட்டம், கல்வி, பொருளாதார அபிவிருத்தி என பல வேலைத்திட்டங்களை செய்து வந்துள்ளேன்.

இன்று நாம் எமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் போரில் ஈடுபட்டுள்ளோம். எனவே, கண்டி மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை இல்லாது செய்வதற்கு முன்னெடுக்கப்படும் சதிகளை முறியடிக்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்க வேண்டும்.

எனவே, இம்முறை எனக்கு சந்தரப்பம் ஒன்று தாருங்கள் நிச்சயமாக கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும் என்றார்.


தமிழ் மக்கள் பிரிந்து செயற்பட்டால் வருங்காலத்தில் தலைகுனிவோடு வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குதள்ளப்படுவோம் பாரத் அருள்சாமி தெரிவிப்பு  “சமூகம், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இவற்றை முறியடிப்பதற்கு ஒற்றுமையே முக்கியம். பொருளாதார ரீதியாக இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நாம், இந்தத் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று நீங்கள் அறிவீர்கள். கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் வகையிலும், அதனை வென்றெடுக்கும் வகையிலும் இந்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.கண்டி கெலாபொக்க பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் பாரத் மேலும் கூறியவை வருமாறு,இந்தத் தேர்தலில் நாங்கள் தொலைபேசி சின்னத்தில் களமிறங்கியுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் ஒத்துழைப்பு மாத்திரமின்றி, நீங்களும் பங்குதாரர்களாக களத்தில்நின்று பிரசாரப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே, நமது வெற்றி பலமடையும். பிரிந்துவிடுவோமேயானால் வருங்காலத்தில் தலைகுனிவோடு வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே, வாக்காளர்களாகிய நீங்கள் யதார்த்தத்தைப் புரிந்து, ஒன்றுபட்டு, எமக்கு வெற்றியைப் பெற்றுத்தாருங்கள்.நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ, மாகாண சபை உறுப்பினராகவோ, பிரதேச சபை உறுப்பினராகவோ அதாவது எந்தவிதமான அரசியல் பதவிகளும் இல்லாமல் கண்டி மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வேலைத்திட்டங்களையும் செய்துக் கொடுத்துள்ளேன்.இன அடையாளம், வீடமைப்பு திட்டம், கல்வி, பொருளாதார அபிவிருத்தி என பல வேலைத்திட்டங்களை செய்து வந்துள்ளேன்.இன்று நாம் எமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் போரில் ஈடுபட்டுள்ளோம். எனவே, கண்டி மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை இல்லாது செய்வதற்கு முன்னெடுக்கப்படும் சதிகளை முறியடிக்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்க வேண்டும்.எனவே, இம்முறை எனக்கு சந்தரப்பம் ஒன்று தாருங்கள் நிச்சயமாக கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement