இம் முறை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 சதவீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுன்ற முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்றையதினம்(22) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட விவசாய மக்கள் காணிகளை மீளப் பெறலாம்.
வன இலாகா 4000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களையும், தொல்பொருள் திணைக்களம் 2600 ஏக்கர்களையும், இது போன்று இலங்கை துறை முக அதிகார சபை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களையும் பௌத்த பிக்குகள் விகாரைக்கான கட்டுமானம் என்ற போர்வையில் பல நிலங்களை அபகரித்துள்ளனர்.
இதனை மீட்க தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகள் தேவை.
எனவே தான் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் செயற்படுவதுடன் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களை பெறலாம்.
ஒற்றுமையாக செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆகிவிடும். யாழ்ப்பாணத்தில் பல கட்சிகளும் பல சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.
தமிழ் வாக்குகளில் மொத்தமாக 98ஆயிரம் வாக்குகள் காணப்படுகிறது இதில் சுமாராக எழுபதாயிரம் வாக்குகளையாவது தமிழ் மக்கள் அளிக்க வேண்டும்.
வாக்குகளை அளிப்பதற்காக மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
இஸ்லாமியர்கள் என்பது வீதமான வாக்குகளை அளிக்கின்றனர் தமிழ் மக்கள் 65 வீதமான வாக்குகளையே அளிக்கின்றனர்.
எனவே, இம் முறை 85 வீதமான வாக்குகளை அளிக்க வேண்டும். அப்போது தான் நம் மண்ணின் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு உரிமைகள் அபிவிருத்திகளை பெற முடியும்.
இந்தியாவில் 15 பேரை வைத்து மோடி ஆட்சி நடத்துகிறார். தெலுங்கான மக்கள் ஒற்றுமை காரணமாகவே இந்த ஆட்சி நடைபெறுகிறது.
மொத்தமாக 545 உறுப்பினர்களை வைத்து அங்கு ஆட்சி இடம்பெறுகிறது.
அது போன்று இங்கு 225 உறுப்பினர்களில் நாம் 25 தமிழ் பிரதிநிதிகளை பெற வேண்டும் .
இவ்வாறாக தான் நாம் இலங்கை தமிழ் அரசு கட்சி டெலோ, புளொட் , ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் ஒற்றுமையாக இணைந்துள்ளோம் இதனால் நம் பிரதிநிதித்துவத்தை ஒற்றுமை மூலமே பாதுகாக்க முடியும் என்றார்.
திருமலையில் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆகிவிடும்-குகதாசன் எச்சரிக்கை. இம் முறை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 சதவீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுன்ற முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.திருகோணமலையில் நேற்றையதினம்(22) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட விவசாய மக்கள் காணிகளை மீளப் பெறலாம். வன இலாகா 4000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களையும், தொல்பொருள் திணைக்களம் 2600 ஏக்கர்களையும், இது போன்று இலங்கை துறை முக அதிகார சபை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களையும் பௌத்த பிக்குகள் விகாரைக்கான கட்டுமானம் என்ற போர்வையில் பல நிலங்களை அபகரித்துள்ளனர். இதனை மீட்க தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகள் தேவை. எனவே தான் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் செயற்படுவதுடன் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களை பெறலாம். ஒற்றுமையாக செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆகிவிடும். யாழ்ப்பாணத்தில் பல கட்சிகளும் பல சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. தமிழ் வாக்குகளில் மொத்தமாக 98ஆயிரம் வாக்குகள் காணப்படுகிறது இதில் சுமாராக எழுபதாயிரம் வாக்குகளையாவது தமிழ் மக்கள் அளிக்க வேண்டும். வாக்குகளை அளிப்பதற்காக மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். இஸ்லாமியர்கள் என்பது வீதமான வாக்குகளை அளிக்கின்றனர் தமிழ் மக்கள் 65 வீதமான வாக்குகளையே அளிக்கின்றனர். எனவே, இம் முறை 85 வீதமான வாக்குகளை அளிக்க வேண்டும். அப்போது தான் நம் மண்ணின் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு உரிமைகள் அபிவிருத்திகளை பெற முடியும். இந்தியாவில் 15 பேரை வைத்து மோடி ஆட்சி நடத்துகிறார். தெலுங்கான மக்கள் ஒற்றுமை காரணமாகவே இந்த ஆட்சி நடைபெறுகிறது. மொத்தமாக 545 உறுப்பினர்களை வைத்து அங்கு ஆட்சி இடம்பெறுகிறது. அது போன்று இங்கு 225 உறுப்பினர்களில் நாம் 25 தமிழ் பிரதிநிதிகளை பெற வேண்டும் .இவ்வாறாக தான் நாம் இலங்கை தமிழ் அரசு கட்சி டெலோ, புளொட் , ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் ஒற்றுமையாக இணைந்துள்ளோம் இதனால் நம் பிரதிநிதித்துவத்தை ஒற்றுமை மூலமே பாதுகாக்க முடியும் என்றார்.