• Apr 15 2026

"ஒரு நாடு எதிர்பார்க்கும் மாற்றத்தை நோக்கி அதனை இட்டுச் செல்ல வேண்டுமாயின், அந்த மாற்றம் நமக்குள்ளும் இருக்க வேண்டும்" - ஹரிணி அமரசூரிய!

shanu / Feb 9th 2026, 5:44 pm
image

கல்வி, பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஒரு பாரிய மாற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில், நாம் வாழ விரும்பும் தேசத்தையும் சமுதாயத்தையும் கட்டியெழுப்புவதற்கான ஆரம்பம் தமக்குள்ளேயே ஏற்பட வேண்டும் எனப் பிரதமர் தெரிவித்தார்.


இசுருபாய, கல்வி அமைச்சு வளாகத்தில் 2026.02.09ஆம் திகதி 14ஆவது தடவையாக நடைபெற்ற 'மகாத்மா காந்தி கல்விப் புலமைப்பரிசில்' வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கல்வி அமைச்சுடன் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்தத் திட்டத்தின் ஊடாக, 2020/2021ஆம் ஆண்டுகளில் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, தெரிவு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கு அவர்களின் மேலதிகக் கல்வி நடவடிக்கைகளுக்காகத் தேவையான நிதி உதவி வழங்கப்பட்டது.


அங்கு வருகை தந்திருந்த மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கி வைத்ததன் பின்னர் உரையாற்றிய பிரதமர்:


இலவசக் கல்வி முறையினுள் எந்தவொரு பிள்ளையும் கைவிடப்படாத வகையில் கல்வியை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வரும் இவ்வேளையில், இவ்வாறான திட்டங்கள் மூலம் திறமையான மாணவர்கள் தமது எதிர்காலப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவி கிடைப்பதாகத் தெரிவித்தார். மகாத்மா காந்தியின் பெயரால் வழங்கப்படும் இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது, அவரது வாழ்க்கையிலிருந்து நாம் பெற வேண்டிய முன்மாதிரிகளை நினைவூட்டுவதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.


இந்நிகழ்வில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மருத்துவர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

"ஒரு நாடு எதிர்பார்க்கும் மாற்றத்தை நோக்கி அதனை இட்டுச் செல்ல வேண்டுமாயின், அந்த மாற்றம் நமக்குள்ளும் இருக்க வேண்டும்" - ஹரிணி அமரசூரிய கல்வி, பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஒரு பாரிய மாற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில், நாம் வாழ விரும்பும் தேசத்தையும் சமுதாயத்தையும் கட்டியெழுப்புவதற்கான ஆரம்பம் தமக்குள்ளேயே ஏற்பட வேண்டும் எனப் பிரதமர் தெரிவித்தார்.இசுருபாய, கல்வி அமைச்சு வளாகத்தில் 2026.02.09ஆம் திகதி 14ஆவது தடவையாக நடைபெற்ற 'மகாத்மா காந்தி கல்விப் புலமைப்பரிசில்' வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கல்வி அமைச்சுடன் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்தத் திட்டத்தின் ஊடாக, 2020/2021ஆம் ஆண்டுகளில் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, தெரிவு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கு அவர்களின் மேலதிகக் கல்வி நடவடிக்கைகளுக்காகத் தேவையான நிதி உதவி வழங்கப்பட்டது.அங்கு வருகை தந்திருந்த மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கி வைத்ததன் பின்னர் உரையாற்றிய பிரதமர்:இலவசக் கல்வி முறையினுள் எந்தவொரு பிள்ளையும் கைவிடப்படாத வகையில் கல்வியை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வரும் இவ்வேளையில், இவ்வாறான திட்டங்கள் மூலம் திறமையான மாணவர்கள் தமது எதிர்காலப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவி கிடைப்பதாகத் தெரிவித்தார். மகாத்மா காந்தியின் பெயரால் வழங்கப்படும் இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது, அவரது வாழ்க்கையிலிருந்து நாம் பெற வேண்டிய முன்மாதிரிகளை நினைவூட்டுவதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.இந்நிகழ்வில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மருத்துவர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement