• Jun 22 2024

வேலைத்திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி..! எச்சரிக்கை விடுத்த IMF

IMF
Chithra / Jun 14th 2024, 3:31 pm
image

Advertisement

 

புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களை மாற்றியமைக்குமானால் அது நாட்டின் நலனிற்குப் பாதகமாகவே அமையுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெற்ற பின்னர் புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை மாற்றியமைப்பதற்கான வாயப்புகள் ஏற்படுமா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன் மறுசீரமைப்பு விடயங்கள், வரிகளின் குறைப்பு, அதற்கான வாய்ப்புகள் காணப்படுமா என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவரிடம் கேள்வி எழுப்பபட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர்,

இலங்கை இவ்வாறான நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்கு பிரதான காரணமே அரசாங்கத்தின் வருமானத்தை குறைப்பதற்காக முன்னெடுத்த திட்டங்கள் ஆகும்.

எனவே நான் இரண்டு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளேன். ஒன்று எவ்வாறு அரச வருவாயை மீளக் கட்டியெழுப்புவது.

இரண்டாவது இலங்கையை இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனுமதிக்கும் வேலைத்திட்டங்கள் பங்கு தொடர்பாக குறிப்பிட்டுள்ளேன்.

நிச்சயமாக இங்கே நாம் செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செலவுகளுக்கு இணையாக அரச வருமாணத்தை உயர்த்த நடவடிககை அவசியம். இதற்கு வரிவருமானம் அவசியமானது.

இவ்வாறு செய்வதன் ஊடகவே மேலும் கடனை பெறமுடியும். இன்னும் இது தொடர்பாக விரிவாகப் பேசவெண்டும்.

இது தொடர்பாக கருத்துக்களை பெறுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். பொது நிதி மேலாண்மை சட்ட மூலம் ஒன்று தற்பொது நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது நிதி கட்டமைப்பை வலுப்படுத்தும் சட்டமூலமாகும். அத்துடன் இந்த சட்டமூலம் நிதிப் பொறுப்பை அதிகரிக்க இலங்கைக்கு உதவும்.

இதன் மூலம் அரச செலவுகளையும் கட்டுப்படுத்த முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேலைத்திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி. எச்சரிக்கை விடுத்த IMF  புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களை மாற்றியமைக்குமானால் அது நாட்டின் நலனிற்குப் பாதகமாகவே அமையுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.தேர்தல் நடைபெற்ற பின்னர் புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை மாற்றியமைப்பதற்கான வாயப்புகள் ஏற்படுமா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.அத்துடன் மறுசீரமைப்பு விடயங்கள், வரிகளின் குறைப்பு, அதற்கான வாய்ப்புகள் காணப்படுமா என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவரிடம் கேள்வி எழுப்பபட்டிருந்தது.இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர்,இலங்கை இவ்வாறான நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்கு பிரதான காரணமே அரசாங்கத்தின் வருமானத்தை குறைப்பதற்காக முன்னெடுத்த திட்டங்கள் ஆகும்.எனவே நான் இரண்டு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளேன். ஒன்று எவ்வாறு அரச வருவாயை மீளக் கட்டியெழுப்புவது.இரண்டாவது இலங்கையை இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனுமதிக்கும் வேலைத்திட்டங்கள் பங்கு தொடர்பாக குறிப்பிட்டுள்ளேன்.நிச்சயமாக இங்கே நாம் செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.செலவுகளுக்கு இணையாக அரச வருமாணத்தை உயர்த்த நடவடிககை அவசியம். இதற்கு வரிவருமானம் அவசியமானது.இவ்வாறு செய்வதன் ஊடகவே மேலும் கடனை பெறமுடியும். இன்னும் இது தொடர்பாக விரிவாகப் பேசவெண்டும்.இது தொடர்பாக கருத்துக்களை பெறுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். பொது நிதி மேலாண்மை சட்ட மூலம் ஒன்று தற்பொது நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இது நிதி கட்டமைப்பை வலுப்படுத்தும் சட்டமூலமாகும். அத்துடன் இந்த சட்டமூலம் நிதிப் பொறுப்பை அதிகரிக்க இலங்கைக்கு உதவும்.இதன் மூலம் அரச செலவுகளையும் கட்டுப்படுத்த முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement