• Nov 28 2024

மாம்பழ சின்னத்துக்கு ஆதரவு வழங்கவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைநகர் கிளை!

Tamil nila / Nov 4th 2024, 10:24 pm
image

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைநகர் மூலக் கிளையானது, நாடாளுமன்ற தேர்தலில் மாம்பழ சின்னத்தில் சுயேட்சைக்குழு 14இல் போட்டியிடும் மாம்பழ சின்னத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, காரைநகர் மூலக்கிளையின் தலைவரும், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான க.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஒரு ஜனநாயகமற்ற சூழல் நிலவுகின்றது. இதனால் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பில் போட்டியிடும் கே.வி.தவராசா, ஈ.சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண சபையின் அமைச்சராக பதவி வகித்த பொ.ஐங்கரநேசன் ஆகிய முக்கிய நபர்களைக் கொண்ட சுயேட்சை குழுவுக்கு நாங்கள் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.

நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடாத்துவதால் இலங்கை தமிழரசுக் கட்சியை சார்ந்தவர்கள் எங்கள்மீது ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கக் கூடும். அதற்கு எல்லாம் துணிந்து தான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். நாங்கள் நாளைமுதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட இருக்கின்றோம்.

மக்களின் நலன்களை நாங்கள் நன்கு அறிந்திருக்கின்றோம். அடிமட்டத்தில் இருக்கின்ற மக்கள் மனதில் உள்ளது என்ன என்பது பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சு பதவிகளை வகித்தவர்களுக்கு தெரியாது. ஆனால் நாங்கள் அடிமட்ட மக்களுடன் பழகியவர்கள். அவர்களுடைய மனங்களை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆகையால் தான் நாங்கள் இந்த மாம்பழ சின்னத்துக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றோம்.

இதன்மூலம் தமிழ் தேசிய நலன்களை மீட்டெடுப்பதற்கும், ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்படுகின்ற இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நாங்கள் இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வரலாற்றினை நாங்கள் பின்னோக்கி பார்ப்போமேயானால் 2015, 2020களில் நடைபெற்றத பொதுத் தேர்தலில் பாரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது. 

இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் வெளியேறி இன்று வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடுகின்றன. இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மேலும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீதரன் அவர்கள் தலைவர் பதவியை வகிக்க முடியாத நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்கலைப்பை சேர்ந்த திரு நடராசா என்பவர் தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் எமது மக்களின் பிரச்சினையை இந்த காட்சி எவ்வாறு அணுகப் போகின்றது. ஆகையால் தான் நாங்கள் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதென தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.

மாம்பழ சின்னத்துக்கு ஆதரவு வழங்கவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைநகர் கிளை இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைநகர் மூலக் கிளையானது, நாடாளுமன்ற தேர்தலில் மாம்பழ சின்னத்தில் சுயேட்சைக்குழு 14இல் போட்டியிடும் மாம்பழ சின்னத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக, காரைநகர் மூலக்கிளையின் தலைவரும், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான க.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஒரு ஜனநாயகமற்ற சூழல் நிலவுகின்றது. இதனால் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பில் போட்டியிடும் கே.வி.தவராசா, ஈ.சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண சபையின் அமைச்சராக பதவி வகித்த பொ.ஐங்கரநேசன் ஆகிய முக்கிய நபர்களைக் கொண்ட சுயேட்சை குழுவுக்கு நாங்கள் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடாத்துவதால் இலங்கை தமிழரசுக் கட்சியை சார்ந்தவர்கள் எங்கள்மீது ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கக் கூடும். அதற்கு எல்லாம் துணிந்து தான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். நாங்கள் நாளைமுதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட இருக்கின்றோம்.மக்களின் நலன்களை நாங்கள் நன்கு அறிந்திருக்கின்றோம். அடிமட்டத்தில் இருக்கின்ற மக்கள் மனதில் உள்ளது என்ன என்பது பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சு பதவிகளை வகித்தவர்களுக்கு தெரியாது. ஆனால் நாங்கள் அடிமட்ட மக்களுடன் பழகியவர்கள். அவர்களுடைய மனங்களை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆகையால் தான் நாங்கள் இந்த மாம்பழ சின்னத்துக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றோம்.இதன்மூலம் தமிழ் தேசிய நலன்களை மீட்டெடுப்பதற்கும், ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்படுகின்ற இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நாங்கள் இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.இலங்கை தமிழரசுக் கட்சியின் வரலாற்றினை நாங்கள் பின்னோக்கி பார்ப்போமேயானால் 2015, 2020களில் நடைபெற்றத பொதுத் தேர்தலில் பாரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது. இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் வெளியேறி இன்று வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடுகின்றன. இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மேலும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்.இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீதரன் அவர்கள் தலைவர் பதவியை வகிக்க முடியாத நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்கலைப்பை சேர்ந்த திரு நடராசா என்பவர் தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் எமது மக்களின் பிரச்சினையை இந்த காட்சி எவ்வாறு அணுகப் போகின்றது. ஆகையால் தான் நாங்கள் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதென தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement