முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர்.
அந்தவகையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து நேற்று இரவு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழிலாளர்களுடன் கடலுக்குள் சென்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை நேரடியாக பார்வையிட்டதுடன், அவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் பலரையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
குறிப்பாக கொக்கிளாய், முகத்துவாரம் மற்றும் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறித் தங்கியுள்ள நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மீனவர்களாலும், திருகோணமலைப் பகுதி மீனவர்களாலுமே இவ்வாறு மிக அதிகளவில் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் மற்றும் சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மிக அதிகளவில் சட்டவிரோத வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவில் சட்டத்திற்குட்பட்டு கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களால் கடற்றொழிலில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக பாராளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சின் ஆலோசனை குழுக்கூட்டத்திலும்,ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் தொடர்சியாக குரல் எழுப்பிவருவதை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
முல்லை கடற்பரப்பில் அதிகரிக்கும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள்; களகத்தில் இறங்கிய ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர்.அந்தவகையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து நேற்று இரவு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழிலாளர்களுடன் கடலுக்குள் சென்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை நேரடியாக பார்வையிட்டதுடன், அவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் பலரையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.குறிப்பாக கொக்கிளாய், முகத்துவாரம் மற்றும் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறித் தங்கியுள்ள நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மீனவர்களாலும், திருகோணமலைப் பகுதி மீனவர்களாலுமே இவ்வாறு மிக அதிகளவில் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் மற்றும் சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிக அதிகளவில் சட்டவிரோத வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவில் சட்டத்திற்குட்பட்டு கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களால் கடற்றொழிலில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக பாராளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சின் ஆலோசனை குழுக்கூட்டத்திலும்,ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் தொடர்சியாக குரல் எழுப்பிவருவதை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டினார்.