• Mar 13 2026

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஆறு பேர் கைது..!

Ziya / Dec 11th 2024, 12:10 pm
image

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, மாணிக்கல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் - டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள டிக்கோயா ஆற்றுப்பகுதியில் சிலர் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஹட்டன் பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்தினபுரி, கஹவத்தை, பலாங்கொடை, ஹட்டன் மற்றும் டிக்கோயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25-40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.


சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஆறு பேர் கைது. காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.அத்தோடு, மாணிக்கல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.அட்டன் - டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள டிக்கோயா ஆற்றுப்பகுதியில் சிலர் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஹட்டன் பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்தினபுரி, கஹவத்தை, பலாங்கொடை, ஹட்டன் மற்றும் டிக்கோயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25-40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement