• Apr 15 2026

வேலணையின் சட்டவிரோத மது போதை வியாபாரி அதிரடிக் கைது!

shanu / Feb 8th 2026, 10:30 pm
image

வேலணையின் மிகப் பெரும் மது போதை  விற்பனையாளர் மதுசாரங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்த சமயம் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்தியை உறுதிசெய்துள்ள ஊர்காவற்றுறை பொலிசார் குறித்த கைது நீண்ட நாள் இலக்குவைத்து இன்றையதினம் (8) இரவு இடம்பெற்றதாகவும்  தெரிவித்தனர்.


இச்சம்பவம் குறித்து மேலும்  தெரிய வருகையில் -


வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து வேலணை பிரதேசத்தில் சாராயம் மற்றும் போதைப்பொருட்களை தனது குடும்பத்தினரது நேரடிப் பங்கெடுப்புடன் நீண்ட பல வருடங்களாக குறித்த நபர் முன்னெடுத்து வருகின்றார்.


அத்துடன் குறித்த நபர் பல சந்தர்ப்பங்களில் கையும் களவுமாக போதை மற்றும் சாராயங்களுடன் பொலிசாரிடம் பிடிபட்டும் தனது விசுவாசிகளை அச்சந்தர்ப்பங்களில்  சட்டத்தின் முன் நிறுத்தச் செய்து தண்டப்பணமும் நீதிமன்ற தண்டனையையும் செலுத்தி அவர்களை மீட்டு தொடர்ந்தும் போதைப் பொருள்  வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளார்.


வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோயில் அருகாமையில் மிகவும் மறைவான இடத்தில்  மாடி வீட்டில் வாழ்ந்துவரும் குறித்த நபர் வீட்டின் சூழல் சாதக நிலையை பயன்படுத்தி இவ்வாறான போதைப்பொருள் மற்றும் சாராயங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.


இதேவேளை  "வடலி பார்"  என்று வேலணையில் புகழ்பெற்ற சட்டவிரோத சாராய விற்பனையாளரான  குறித்த நபரின் சகோதரரும் மற்றொருபுறம் குறித்த வியாபாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த நபர், தனது மனைவி, மனைவியின் தந்தையார், மைத்துனன் என அனைவரது நேரடி ஒத்துழைபுடன் குறித்த மது போதை வியாபாரத்தை தமது நிரந்தர முதலீடாக்கி பல இலட்சங்களை வாராவாரம் ஈட்டி வருவதாக நேரடியாகவே குற்றச்சாட்டு இருக்கின்றது.


அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் பொலிசாருக்கு கையூட்டு கொடுத்து சட்டத்தில் இருந்து தப்பித்து வந்ததாகவும் மக்கள் சுட்டிக்காடி வந்தனர்.


இன்னிலையில் தற்போது போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற அரசின் எதிர்பார்ப்பை நிறைவு  செய்யும் வகையில் ஊர்காவற்றுறை பொலிசார் கடும் முயற்சிகளை முன்னெடுத்து பல போதைப்பொருள் மதுசார விற்பனையாளர், போதைப்பொருள் மதுசார நுகர்வோர் என பலரை கைது செய்து வருகின்றனர். 

.

இந்நிலையில் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று(8) குறித்த நபர் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் ஊர்காவற்றுறை பொலிசாரால் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.


கைதான நபரை விசாரணைகளின் பின் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நாளை முன்னிலைபடுத்தவுள்ளதாகஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வேலணையின் சட்டவிரோத மது போதை வியாபாரி அதிரடிக் கைது வேலணையின் மிகப் பெரும் மது போதை  விற்பனையாளர் மதுசாரங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்த சமயம் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.செய்தியை உறுதிசெய்துள்ள ஊர்காவற்றுறை பொலிசார் குறித்த கைது நீண்ட நாள் இலக்குவைத்து இன்றையதினம் (8) இரவு இடம்பெற்றதாகவும்  தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து மேலும்  தெரிய வருகையில் -வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து வேலணை பிரதேசத்தில் சாராயம் மற்றும் போதைப்பொருட்களை தனது குடும்பத்தினரது நேரடிப் பங்கெடுப்புடன் நீண்ட பல வருடங்களாக குறித்த நபர் முன்னெடுத்து வருகின்றார்.அத்துடன் குறித்த நபர் பல சந்தர்ப்பங்களில் கையும் களவுமாக போதை மற்றும் சாராயங்களுடன் பொலிசாரிடம் பிடிபட்டும் தனது விசுவாசிகளை அச்சந்தர்ப்பங்களில்  சட்டத்தின் முன் நிறுத்தச் செய்து தண்டப்பணமும் நீதிமன்ற தண்டனையையும் செலுத்தி அவர்களை மீட்டு தொடர்ந்தும் போதைப் பொருள்  வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளார்.வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோயில் அருகாமையில் மிகவும் மறைவான இடத்தில்  மாடி வீட்டில் வாழ்ந்துவரும் குறித்த நபர் வீட்டின் சூழல் சாதக நிலையை பயன்படுத்தி இவ்வாறான போதைப்பொருள் மற்றும் சாராயங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.இதேவேளை  "வடலி பார்"  என்று வேலணையில் புகழ்பெற்ற சட்டவிரோத சாராய விற்பனையாளரான  குறித்த நபரின் சகோதரரும் மற்றொருபுறம் குறித்த வியாபாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த நபர், தனது மனைவி, மனைவியின் தந்தையார், மைத்துனன் என அனைவரது நேரடி ஒத்துழைபுடன் குறித்த மது போதை வியாபாரத்தை தமது நிரந்தர முதலீடாக்கி பல இலட்சங்களை வாராவாரம் ஈட்டி வருவதாக நேரடியாகவே குற்றச்சாட்டு இருக்கின்றது.அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் பொலிசாருக்கு கையூட்டு கொடுத்து சட்டத்தில் இருந்து தப்பித்து வந்ததாகவும் மக்கள் சுட்டிக்காடி வந்தனர்.இன்னிலையில் தற்போது போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற அரசின் எதிர்பார்ப்பை நிறைவு  செய்யும் வகையில் ஊர்காவற்றுறை பொலிசார் கடும் முயற்சிகளை முன்னெடுத்து பல போதைப்பொருள் மதுசார விற்பனையாளர், போதைப்பொருள் மதுசார நுகர்வோர் என பலரை கைது செய்து வருகின்றனர். .இந்நிலையில் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று(8) குறித்த நபர் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் ஊர்காவற்றுறை பொலிசாரால் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான நபரை விசாரணைகளின் பின் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நாளை முன்னிலைபடுத்தவுள்ளதாகஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement