• Mar 10 2026

இனி நான் சினிமாவில் நடிக்கப் போறதே இல்ல… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகர்.!

Ziya / Feb 14th 2026, 5:51 pm
image

தமிழ் சினிமாவில் தனித்துவமான காதல் கதைகளாலும், ஸ்டைலிஷ் காட்சியமைப்பாலும் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ள இயக்குநர் கெளதம் மேனன் சமீபத்திய நேர்காணலில் கூறிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


அந்த பேட்டியில் கெளதம் மேனன் மனம் திறந்து கதைத்துள்ளார். 


அதாவது, " இனி நான் சினிமால நடிக்கப்போறது இல்ல... அதுக்காக நான் சினிமாவுக்கு வரல, இப்போ நடிக்க பெருசா ஆர்வமும் இல்ல. ஒரு கட்டத்தில நான் நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒரு சில படங்களில இயக்குநர்களுக்காக நடிச்சேன்.


வெற்றிமாறன் கூப்பிட்டப்ப, அவர் எப்படி படம் எடுக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பா இருக்கும்னு நடிக்க ஒத்துக்கிட்டேன். 


ஆனா நடிக்கும் போதெல்லாம் நடிக்கிறதுக்காக நாம வரலயேன்னு எண்ணம் போய்கிட்டே இருக்கும். அதனால, இனி நடிக்கப் போறதே இல்ல" என்று கூறியுள்ளார்.


இயக்குநராகத் தன் பயணத்தைத் தொடங்கியவர் என்ற அடையாளத்தையே தக்க வைத்துக்கொள்ள விரும்புவதையே அவரது இந்தப் பேட்டி உணர்த்துகிறது. 


கெளதம் மேனன் இயக்கிய படங்கள் தமிழ் சினிமாவில் தனி வகையாக காணப்படுகின்றன. காதல், உணர்ச்சி, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அவரது படைப்புகள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி நான் சினிமாவில் நடிக்கப் போறதே இல்ல… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகர். தமிழ் சினிமாவில் தனித்துவமான காதல் கதைகளாலும், ஸ்டைலிஷ் காட்சியமைப்பாலும் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ள இயக்குநர் கெளதம் மேனன் சமீபத்திய நேர்காணலில் கூறிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.அந்த பேட்டியில் கெளதம் மேனன் மனம் திறந்து கதைத்துள்ளார். அதாவது, " இனி நான் சினிமால நடிக்கப்போறது இல்ல. அதுக்காக நான் சினிமாவுக்கு வரல, இப்போ நடிக்க பெருசா ஆர்வமும் இல்ல. ஒரு கட்டத்தில நான் நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒரு சில படங்களில இயக்குநர்களுக்காக நடிச்சேன்.வெற்றிமாறன் கூப்பிட்டப்ப, அவர் எப்படி படம் எடுக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பா இருக்கும்னு நடிக்க ஒத்துக்கிட்டேன். ஆனா நடிக்கும் போதெல்லாம் நடிக்கிறதுக்காக நாம வரலயேன்னு எண்ணம் போய்கிட்டே இருக்கும். அதனால, இனி நடிக்கப் போறதே இல்ல" என்று கூறியுள்ளார்.இயக்குநராகத் தன் பயணத்தைத் தொடங்கியவர் என்ற அடையாளத்தையே தக்க வைத்துக்கொள்ள விரும்புவதையே அவரது இந்தப் பேட்டி உணர்த்துகிறது. கெளதம் மேனன் இயக்கிய படங்கள் தமிழ் சினிமாவில் தனி வகையாக காணப்படுகின்றன. காதல், உணர்ச்சி, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அவரது படைப்புகள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement