• Nov 24 2024

இந்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு..!!

Tamil nila / Mar 3rd 2024, 5:58 pm
image

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இந்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

அதாவது இந்த பயணத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு, எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

குறித்த இந்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கடந்த வாரம் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்.

IMF குழு மார்ச் 7 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், இரண்டு வாரங்களுக்கு 3 பில்லியன் டொலர் IMF கடனின் இரண்டாம் தவணை மீளாய்வு நடவடிக்கையில் ஈடுபடும்.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனுக்கான இலங்கையின் இரண்டாவது மீளாய்வு, பொருளாதார மீட்சிக்கு தேவையான பல சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

இதற்கமைய  இரண்டாவது பரிசீலனை மார்ச் 7 முதல் தொடங்கும், இது முதல் மதிப்பாய்வை விட சுமூகமான மதிப்பாய்வாக இருக்கும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம் - என்றார்.

இந்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியக் குழு. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இந்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.அதாவது இந்த பயணத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு, எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.குறித்த இந்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கடந்த வாரம் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்.IMF குழு மார்ச் 7 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், இரண்டு வாரங்களுக்கு 3 பில்லியன் டொலர் IMF கடனின் இரண்டாம் தவணை மீளாய்வு நடவடிக்கையில் ஈடுபடும்.குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனுக்கான இலங்கையின் இரண்டாவது மீளாய்வு, பொருளாதார மீட்சிக்கு தேவையான பல சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.இதற்கமைய  இரண்டாவது பரிசீலனை மார்ச் 7 முதல் தொடங்கும், இது முதல் மதிப்பாய்வை விட சுமூகமான மதிப்பாய்வாக இருக்கும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement