வவுனியா, பம்பைமடு - சாலம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை நேரில் ஆராய்வதற்காக, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க நேற்றைய தினம் (06) குறித்த பகுதியில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
வவுனியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவுகள் இப்பகுதிக்கு கொண்டு வரப்படுவதனால், அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இப் பிரச்சினைக்கு மிகவும் வினைத்திறனான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான தீர்வுகளைக் காண்பதற்கென வவுனியா மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது.
இதன்போது, குறித்த குப்பை கொட்டும் வளாகத்தை பொருத்தமான வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக வவுனியா மேலதிக மாவட்ட செயலாளரின் தலைமையில் விசேட அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை நாள்தோறும் கொண்டு வரப்படும் கழிவுகளை முறையாக மண்ணிட்டு மூடுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும், எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் இந்த குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் என அமைச்சர் உபாலி சமரசிங்க இதன்போது உறுதியளித்தார்.
இந்த விஜயத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், ஸ்ரீஅவர்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காகவும், இதில் விசேட அக்கறை காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
1992ஆம் ஆண்டு முதல் வவுனியா மாநகரசபையினால் சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான நிலப்பரப்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த குப்பை வளாகம், தற்போது அப்பகுதியின் பிரதான சுற்றுச்சூழல் சவாலாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா குப்பை பிரச்சினைக்கு உடனடி தீர்வு: களத்தில் இறங்கிய அமைச்சர் உபாலி சமரசிங்க வவுனியா, பம்பைமடு - சாலம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை நேரில் ஆராய்வதற்காக, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க நேற்றைய தினம் (06) குறித்த பகுதியில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.வவுனியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவுகள் இப்பகுதிக்கு கொண்டு வரப்படுவதனால், அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.இப் பிரச்சினைக்கு மிகவும் வினைத்திறனான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான தீர்வுகளைக் காண்பதற்கென வவுனியா மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது. இதன்போது, குறித்த குப்பை கொட்டும் வளாகத்தை பொருத்தமான வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக வவுனியா மேலதிக மாவட்ட செயலாளரின் தலைமையில் விசேட அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை நாள்தோறும் கொண்டு வரப்படும் கழிவுகளை முறையாக மண்ணிட்டு மூடுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.மேலும், எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் இந்த குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் என அமைச்சர் உபாலி சமரசிங்க இதன்போது உறுதியளித்தார். இந்த விஜயத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், ஸ்ரீஅவர்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காகவும், இதில் விசேட அக்கறை காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.1992ஆம் ஆண்டு முதல் வவுனியா மாநகரசபையினால் சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான நிலப்பரப்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த குப்பை வளாகம், தற்போது அப்பகுதியின் பிரதான சுற்றுச்சூழல் சவாலாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.