• Jan 22 2025

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது

Chithra / Jan 21st 2025, 5:02 pm
image

 

விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலஞ்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்காக, அதே நிலையத்தில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரே குறித்த தொகையை இலஞ்சமாக கோரியுள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்த நிலையத்தில் உள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


இதேவேளை  அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள அரச காணி ஒன்றினை போலி ஆவணங்கள் மூலம் 22 மில்லியன் ரூபாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. 

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது  விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலஞ்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்காக, அதே நிலையத்தில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரே குறித்த தொகையை இலஞ்சமாக கோரியுள்ளார்.அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்த நிலையத்தில் உள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.இதேவேளை  அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள அரச காணி ஒன்றினை போலி ஆவணங்கள் மூலம் 22 மில்லியன் ரூபாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement