• Dec 17 2025

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!

Chithra / Dec 17th 2025, 11:35 am
image


வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான பாதீடானது இன்றையதினம் நிறைவேற்றப்பட்டது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பாதீட்டு சபைக்கூட்டமானது இன்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது தவிசாளர் பாதீட்டு உரையை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பாதீடு மீதான கருத்துக்களை உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

28 உறுப்பினர்களை கொண்ட சபையில் 20 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 06 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். 02 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடானது 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான பாதீடானது இன்றையதினம் நிறைவேற்றப்பட்டது.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பாதீட்டு சபைக்கூட்டமானது இன்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமாகியது.இதன்போது தவிசாளர் பாதீட்டு உரையை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பாதீடு மீதான கருத்துக்களை உறுப்பினர்கள் முன்வைத்தனர்.28 உறுப்பினர்களை கொண்ட சபையில் 20 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 06 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். 02 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.இந்நிலையில் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடானது 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement