சுற்றுலா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இலங்கைக்கான மோட்டார் வாகனங்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது,
ஆனால் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரின் முன்மொழிவின்படி, போக்குவரத்துக்காக 250 மினி பஸ்கள் மற்றும் 75 வேன்களுக்கு கடந்த 01ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விசேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குமுறை சட்டத்தை
நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி. விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியீடு சுற்றுலா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.இலங்கைக்கான மோட்டார் வாகனங்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது,ஆனால் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரின் முன்மொழிவின்படி, போக்குவரத்துக்காக 250 மினி பஸ்கள் மற்றும் 75 வேன்களுக்கு கடந்த 01ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.அதன்படி மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.மேலும் விசேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குமுறை சட்டத்தைநாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.