• Nov 14 2024

இலங்கையில் இரத்ததானம் செய்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / May 24th 2024, 4:11 pm
image


இரத்ததானம் செய்யும்போது இரத்தத்தின் அளவை மீறவேண்டாமென தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க இரத்ததானம் செய்பவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெசாக் பண்டிகையின் போது இரத்ததான நிலையத்திற்கு இரத்ததானம் செய்வதற்கு அதிகளவு நன்கொடைகள் வழங்கப்படுமென பணிப்பாளர் தெரிவித்தார்.

இதனால், அதிக இரத்தம் கொடுக்கப்படும்போது அதை சேமிப்பதில் சிரமமேற்பட்டு வீணடிக்கப்படுகின்றது. 

எனவே, இரத்ததான சிகிச்சை நிலையங்களில் தேவையான இரத்தத்தை மாத்திரம் பெறவேண்டுமென தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரலில் தேசிய இரத்த மாற்று நிலையத்தில் இரத்தம் தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், தற்போது நிலைமை தணிந்து தேவையான அளவு இரத்தம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் இரத்ததானம் செய்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு இரத்ததானம் செய்யும்போது இரத்தத்தின் அளவை மீறவேண்டாமென தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க இரத்ததானம் செய்பவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.வெசாக் பண்டிகையின் போது இரத்ததான நிலையத்திற்கு இரத்ததானம் செய்வதற்கு அதிகளவு நன்கொடைகள் வழங்கப்படுமென பணிப்பாளர் தெரிவித்தார்.இதனால், அதிக இரத்தம் கொடுக்கப்படும்போது அதை சேமிப்பதில் சிரமமேற்பட்டு வீணடிக்கப்படுகின்றது. எனவே, இரத்ததான சிகிச்சை நிலையங்களில் தேவையான இரத்தத்தை மாத்திரம் பெறவேண்டுமென தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.கடந்த ஏப்ரலில் தேசிய இரத்த மாற்று நிலையத்தில் இரத்தம் தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், தற்போது நிலைமை தணிந்து தேவையான அளவு இரத்தம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement