• Nov 23 2024

சாதா­ரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! samugammedia

Chithra / Dec 1st 2023, 9:06 am
image

 


2023(2022) கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­ த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகளை இலங்கை பரீட்­சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்துப் பாடசாலை பரீட்சார்த்திகள் அச்சிடப்பட்ட பெறுபேறு சான்றிதழ், குறித்த அதிபர்களுக்கும் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு சான்றிதழ் பரீட்சார்த்திகளுக்கும் மீள் மதிப்பீட்டுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் என  குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயன்பாட்டிற்கான பரீட்சை சான்றிதழ்களுக்கு இன்று (01) முதல் இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு நடத்தப்பட்டது.

இதற்கமைய, 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 78,103 தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.


சாதா­ரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia  2023(2022) கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­ த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகளை இலங்கை பரீட்­சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அனைத்துப் பாடசாலை பரீட்சார்த்திகள் அச்சிடப்பட்ட பெறுபேறு சான்றிதழ், குறித்த அதிபர்களுக்கும் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு சான்றிதழ் பரீட்சார்த்திகளுக்கும் மீள் மதிப்பீட்டுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் என  குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயன்பாட்டிற்கான பரீட்சை சான்றிதழ்களுக்கு இன்று (01) முதல் இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு நடத்தப்பட்டது.இதற்கமைய, 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 78,103 தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

Advertisement

Advertisement

Advertisement