• Nov 28 2024

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!

Chithra / Dec 14th 2023, 11:23 am
image

 

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகளும் நேர அட்டவணையையும் தற்போது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகி 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை இதுவரை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத மற்றும் அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்ய முடியாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களால் விண்ணப்பிக்கப்பட்ட  விண்ணப்பங்களின் பிரதி, பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டின் நிழற்பிரதி அல்லது பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்கான அஞ்சல் அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் பரீட்சைத் திணைக்களத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்  அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகளும் நேர அட்டவணையையும் தற்போது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகி 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதேவேளை இதுவரை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத மற்றும் அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்ய முடியாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களால் விண்ணப்பிக்கப்பட்ட  விண்ணப்பங்களின் பிரதி, பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டின் நிழற்பிரதி அல்லது பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்கான அஞ்சல் அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் பரீட்சைத் திணைக்களத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement