• May 17 2026

2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு குறித்து முக்கிய அறிவிப்பு

Chithra / May 17th 2026, 5:53 pm
image

2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 


இதன்படி, இந்த ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத அல்லது முகவரி, பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் காணப்படுகின்ற, 01.02.2009ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த நபர்கள் அது குறித்து தமது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் விசாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 


வரவிருக்கும் பதிவுச் செயல்முறைக்கு முன்னர், தங்களது விபரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 


அதேபோல், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றும் தங்களது விபரங்கள் சரியானவையா என்பதைப் பரிசீலித்துப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு குறித்து முக்கிய அறிவிப்பு 2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத அல்லது முகவரி, பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் காணப்படுகின்ற, 01.02.2009ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த நபர்கள் அது குறித்து தமது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் விசாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வரவிருக்கும் பதிவுச் செயல்முறைக்கு முன்னர், தங்களது விபரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றும் தங்களது விபரங்கள் சரியானவையா என்பதைப் பரிசீலித்துப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement