எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது, அமெரிக்க-இலங்கை வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பிலலும் ஆராயப்பட்டது.
இச் சந்திப்பு தொடர்பில் சஜித் பிரேமதாச வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
"வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதருடன் இன்று ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
வாய்ப்புகளைத் திறக்கும், இலங்கைத் தொழில்களை ஆதரிக்கும் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் உண்மையான நன்மைகளை வழங்கும் நியாயமான, எதிர்கால நோக்குடைய கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தினேன் என அப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க தூதர் ஜூலி சுங் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
"இலங்கை-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவை மேலும் சமநிலையில் கொண்டு வருவது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று பயனுள்ள கலந்துரையாடல். நியாயமான வர்த்தக இயக்கவியல் நமது இரு நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கும் அமெரிக்கத் தூதருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்றது.இதன்போது, அமெரிக்க-இலங்கை வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பிலலும் ஆராயப்பட்டது.இச் சந்திப்பு தொடர்பில் சஜித் பிரேமதாச வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதருடன் இன்று ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. வாய்ப்புகளைத் திறக்கும், இலங்கைத் தொழில்களை ஆதரிக்கும் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் உண்மையான நன்மைகளை வழங்கும் நியாயமான, எதிர்கால நோக்குடைய கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தினேன் என அப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க தூதர் ஜூலி சுங் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"இலங்கை-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவை மேலும் சமநிலையில் கொண்டு வருவது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று பயனுள்ள கலந்துரையாடல். நியாயமான வர்த்தக இயக்கவியல் நமது இரு நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.