• Apr 13 2025

பட்டலந்த ஆணைக்குழு தொடர்பில் இன்று நாடாளுமன்ற விவாதம்

Chithra / Apr 10th 2025, 8:36 am
image

 

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது.

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் காணப்பட்ட சித்திரவதை முகாம் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு மற்றும் அதன் அறிக்கை குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.

இன்றைய தினம் முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த மார்ச் மாதம் 14ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்த விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு பின்னர், அடுத்த பாராளுமன்ற அமர்வு மே மாதம் 8ஆம் திகதி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பட்டலந்த ஆணைக்குழு தொடர்பில் இன்று நாடாளுமன்ற விவாதம்  பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது.பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் காணப்பட்ட சித்திரவதை முகாம் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு மற்றும் அதன் அறிக்கை குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.இன்றைய தினம் முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த மார்ச் மாதம் 14ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கை குறித்த விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது.நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.இந்நிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு பின்னர், அடுத்த பாராளுமன்ற அமர்வு மே மாதம் 8ஆம் திகதி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement