சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்கு தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அழிந்துவரும் மீன்வளங்களை மீள்நிலைக்குக் கொண்டு வரல் மற்றும் உணவுப் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மீன் பிடியைத் தடுத்தல், ஊக்குவிக்காதிருத்தல் மற்றும் இல்லாதொழிப்பதற்கான சர்வதேச செயற்பாட்டுத்திட்டம் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உறுப்பு நாடுகளால் 2001 ஆம் ஆண்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் பெறுபேறாக, இலங்கையும் அதற்காக தேசிய செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்துள்ளது. அத்துடன், பிராந்திய சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும்
ஒழுங்கு முறைப்படுத்தப்படாத மீன்பிடி தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வங்காளவிரிகுடா வேலைத்திட்டம் நாடுகளுக்கிடையிலான சர்வதேச அமைப்பின் அங்கத்துவ நாடுகள் கூட்டான பிராந்திய செயற்பாட்டுத் திட்டத்தில் கையொப்பமிடுவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளன.
இத்திட்டத்தின் மூலம் பங்களாதேசம், இந்தியா, மாலைதீவு, மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்குரிய தனித்துவமான பொருளாதார வலயங்களைப் போலவே, எங்களுக்கு கடல் மற்றும் சமுத்திரங்களுக்கு தேசிய நீதிமன்ற அதிகாரத்திற்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் சட்ட விரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மீன் பிடியைத் தடுத்தல்,
ஊக்குவிக்காதிருத்தல் மற்றும்
இல்லாதொழிப்பதைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய, குறித்த பிராந்திய செயற்பாட்டுத் திட்டத்தில் கையொப்பமிடுவதற்காக கடற்றொழில், நீரியல்
மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் செயற்றிட்டம்; கடற்றொழில் அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்கு தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அழிந்துவரும் மீன்வளங்களை மீள்நிலைக்குக் கொண்டு வரல் மற்றும் உணவுப் பாதுகாப்பைஉறுதிப்படுத்தும் நோக்கத்துடன், சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மீன் பிடியைத் தடுத்தல், ஊக்குவிக்காதிருத்தல் மற்றும் இல்லாதொழிப்பதற்கான சர்வதேச செயற்பாட்டுத்திட்டம் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உறுப்பு நாடுகளால் 2001 ஆம் ஆண்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பெறுபேறாக, இலங்கையும் அதற்காக தேசிய செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்துள்ளது. அத்துடன், பிராந்திய சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும்ஒழுங்கு முறைப்படுத்தப்படாத மீன்பிடி தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வங்காளவிரிகுடா வேலைத்திட்டம் நாடுகளுக்கிடையிலான சர்வதேச அமைப்பின் அங்கத்துவ நாடுகள் கூட்டான பிராந்திய செயற்பாட்டுத் திட்டத்தில் கையொப்பமிடுவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளன. இத்திட்டத்தின் மூலம் பங்களாதேசம், இந்தியா, மாலைதீவு, மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்குரிய தனித்துவமான பொருளாதார வலயங்களைப் போலவே, எங்களுக்கு கடல் மற்றும் சமுத்திரங்களுக்கு தேசிய நீதிமன்ற அதிகாரத்திற்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் சட்ட விரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மீன் பிடியைத் தடுத்தல்,ஊக்குவிக்காதிருத்தல் மற்றும் இல்லாதொழிப்பதைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய, குறித்த பிராந்திய செயற்பாட்டுத் திட்டத்தில் கையொப்பமிடுவதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.