சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குறறச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடுவலை, வெலிவிட்ட பகுதியில் 2012 மார்ச் 4 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடுவலை வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு உறவினரின் வீட்டிற்கு சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான ஆதாரங்கள் நிரூபணமான நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தார்.
வழக்கு விசாரணைகள் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நேற்று (26) எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் சந்தேக நபருக்கு 20,000 ரூபா நீதிமன்றக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்றும், அந்தத் தொகையை செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதேநேரம் பாதிக்கப்பட்டவருக்கு 300,000 ரூபா இழப்பீடு வழங்குமாறும், அந்தத் தொகையை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.
கடுவலைப் பகுதியில் சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேகநபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குறறச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடுவலை, வெலிவிட்ட பகுதியில் 2012 மார்ச் 4 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் கடுவலை வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு உறவினரின் வீட்டிற்கு சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் நிரூபணமான நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தார். வழக்கு விசாரணைகள் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நேற்று (26) எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் சந்தேக நபருக்கு 20,000 ரூபா நீதிமன்றக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்றும், அந்தத் தொகையை செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதேநேரம் பாதிக்கப்பட்டவருக்கு 300,000 ரூபா இழப்பீடு வழங்குமாறும், அந்தத் தொகையை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.