• Aug 27 2025

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் ஐவரின் நிலைமை கவலைக்கிடம்; பாரவூர்தி சாரதி கைது

Chithra / Aug 27th 2025, 1:36 pm
image

குருநாகல் - குளியாப்பிட்டிய பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள பல்லேவல பாலத்திற்கு அருகில் இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். 

விபத்தில் பாடசாலை மாணவர்கள் 13 பேர் காயமடைந்தனர். 

அவர்களில், 2 பேர் கொழும்பு தேசிய மருத்துவனைக்கும் 3 பேர் குருநாகல் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

இவர்களின் நிலைமையே கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்புக்கள் தெரிவித்துள்ளன. 

பலப்பிட்டி பிரதேசத்தில் 15 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை வாகனமும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து நேர்ந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது மாணவர்களை ஏற்றிச் சென்ற சாரதியும் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

 அத்துடன், பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.


விபத்தில் காயமடைந்த மாணவர்கள் ஐவரின் நிலைமை கவலைக்கிடம்; பாரவூர்தி சாரதி கைது குருநாகல் - குளியாப்பிட்டிய பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள பல்லேவல பாலத்திற்கு அருகில் இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். விபத்தில் பாடசாலை மாணவர்கள் 13 பேர் காயமடைந்தனர். அவர்களில், 2 பேர் கொழும்பு தேசிய மருத்துவனைக்கும் 3 பேர் குருநாகல் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமையே கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்புக்கள் தெரிவித்துள்ளன. பலப்பிட்டி பிரதேசத்தில் 15 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை வாகனமும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து நேர்ந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது மாணவர்களை ஏற்றிச் சென்ற சாரதியும் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அத்துடன், பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement