• Aug 27 2025

சர்வதேசத்தின் நீதி கண்களில் மண்ணைத் தூவும் செயற்பாடே ரணிலின் கைது! - அருட்தந்தை மா.சத்திவேல்

shanuja / Aug 27th 2025, 3:03 pm
image

சர்வதேசத்தின் நீதி கண்களில் மண்ணைத் தூவவும், தமிழருக்கான நீதியை மறுப்பதற்கும் ஒரு முன்னேற்பாடான செயற்பாடாகவே முன்னாள் ஜனாதிபதியை கைது செய்துள்ளதாகத் தோன்றுகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.


அவரால் இன்று (27.08.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


"சட்டம், நீதி அனைவருக்கும் சமம். பதவி, தகுதி, சமூக நிலை பார்க்கப்பட மாட்டாது. குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு சட்டத்திற்கேட்ப தண்டிக்கப்படுவார்கள். இதில் நாம் பின்வாங்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க தேசிய பிக்குகள் பேரவை கூட்டத்தில் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 


ஆனால் போர் குற்ற விசாரணை நடைபெறும் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே கூறி இருந்தமையை நினைக்கும் போது சட்டம் நீதி தொடர்பில் அவரின் இரட்டை நாக்கு நிலைப்பாட்டையும், அரசியல் சித்து விளையாட்டையும் வெளிபடுத்துகின்றது. மனுதர்ம சட்டத்தின் படி இதுவும் குற்றமே. இதுவும் தண்டிக்கப்பட வேண்டியதே.


பௌத்த தர்மத்தின் படி பிக்குகள் என்போர் பதவி, தகுதி, சமூக நிலை, சொத்து,சுகம் அனைத்தையும் கடந்தவர்கள். சமூகத்தின் அடிப்பட்ட மக்களின் வாழ்வியலோடு பயணிப்பதன் அடையாளமாகவே பிச்சை பாத்திரம் ஏந்தி வாழ்விற்கு முன் உதாரணம் காட்டுகின்றார்கள். 


அத்தகையவர்கள் அரச கட்டமைப்பினால் பாதிக்கப்பட்டு சட்டம் நீதி சமம் மறுக்கப்பட்ட ஓய்வுக்காக குரல் கொடுக்க முன் வருவதோடு அதற்கு ஜனாதிபதிக்கும் அவர் இயக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்குமாறு கேட்கின்றோம். சிங்கள பௌத்த படையினருக்கு ஒரு நீதி அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு நீதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இதனை மாற்றுவதன் மூலமே சட்ட சமத்துவத்தை அனுபவிக்க முடியும்.அம் மாற்றத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்கின்றோம்.


மேலும் ரணில் வெளிநாட்டில் செலவழித்த அரச பணம் மிக சொற்பமே. அதற்கு தண்டனை கொடுப்பது அநீதியானது. ஆனால் பட்டலந்த வதை முகாம், மத்திய வங்கி பணமோசடி தொடர்பில் வழக்கு தொடருங்கள் நாம் அதற்கு ஆதரவளிப்போம் எனக் கூறி ஏழை மக்களை வீதியில் இறக்க ஒன்று கூடிய அரசியல் போர் குற்றங்கள் தொடர்பில் தமிழர்கள் கேட்கும் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிப்பார்களா? அத்தகைய குரல் எங்கும் எழவில்லை எழப்போவதுமில்லை.ஏனெனில் ஒன்று வர்க்க அரசியல்.இன்னொன்று சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்.


ஒரு நாட்டில் சட்டம்,நீதி என்பன இனம், மொழி, சமயம் சார்ந்ததாக இருக்குமெனில் அங்கு இருள் கவ்வும் என்பது உண்மை. இலங்கையைப் பொறுத்தளவில் நாட்டின் அரசியல் யாப்பு இனம், சமயம், மொழி சார்ந்ததாகவும் அரச கட்டமைப்புகள் அதன் காவலாக திகளும் போது சமத்துவத்தை மக்கள் அனுபவிக்க முடியாது.அதனை மாற்ற முனையாது. 


சட்டம் அனைவருக்கும் சமம் என்பவர்கள் அரசியல் நாடகவாதிகளே. கடந்த 75 ஆண்டுகளாக இன அழிவுக்கும் இனப்படு கொலைக்கும் முகம் கொடுப்பது யாப்பு ரீதியிலான அரசியல் பாதுகாப்பு இன்னமையே காரணமாகும். அதனை முதுகெலும்பு இல்லா அரசியல் வாதிகள் நரி பரம்பரையினரே. அனைத்து மக்களின் இன,சமய, மொழி,கலை கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும் தனித்துவத்தையும் பாதுகாக்கும் போதே நாட்டல் நீதியும் சட்டமும் சமத்துவமாக அமையும். அதற்கு முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் சக்தி எழுச்சி ஒன்று மட்டுமே வழிவகுக்கும். - என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் நீதி கண்களில் மண்ணைத் தூவும் செயற்பாடே ரணிலின் கைது - அருட்தந்தை மா.சத்திவேல் சர்வதேசத்தின் நீதி கண்களில் மண்ணைத் தூவவும், தமிழருக்கான நீதியை மறுப்பதற்கும் ஒரு முன்னேற்பாடான செயற்பாடாகவே முன்னாள் ஜனாதிபதியை கைது செய்துள்ளதாகத் தோன்றுகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவரால் இன்று (27.08.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"சட்டம், நீதி அனைவருக்கும் சமம். பதவி, தகுதி, சமூக நிலை பார்க்கப்பட மாட்டாது. குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு சட்டத்திற்கேட்ப தண்டிக்கப்படுவார்கள். இதில் நாம் பின்வாங்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க தேசிய பிக்குகள் பேரவை கூட்டத்தில் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் போர் குற்ற விசாரணை நடைபெறும் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே கூறி இருந்தமையை நினைக்கும் போது சட்டம் நீதி தொடர்பில் அவரின் இரட்டை நாக்கு நிலைப்பாட்டையும், அரசியல் சித்து விளையாட்டையும் வெளிபடுத்துகின்றது. மனுதர்ம சட்டத்தின் படி இதுவும் குற்றமே. இதுவும் தண்டிக்கப்பட வேண்டியதே.பௌத்த தர்மத்தின் படி பிக்குகள் என்போர் பதவி, தகுதி, சமூக நிலை, சொத்து,சுகம் அனைத்தையும் கடந்தவர்கள். சமூகத்தின் அடிப்பட்ட மக்களின் வாழ்வியலோடு பயணிப்பதன் அடையாளமாகவே பிச்சை பாத்திரம் ஏந்தி வாழ்விற்கு முன் உதாரணம் காட்டுகின்றார்கள். அத்தகையவர்கள் அரச கட்டமைப்பினால் பாதிக்கப்பட்டு சட்டம் நீதி சமம் மறுக்கப்பட்ட ஓய்வுக்காக குரல் கொடுக்க முன் வருவதோடு அதற்கு ஜனாதிபதிக்கும் அவர் இயக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்குமாறு கேட்கின்றோம். சிங்கள பௌத்த படையினருக்கு ஒரு நீதி அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு நீதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இதனை மாற்றுவதன் மூலமே சட்ட சமத்துவத்தை அனுபவிக்க முடியும்.அம் மாற்றத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்கின்றோம்.மேலும் ரணில் வெளிநாட்டில் செலவழித்த அரச பணம் மிக சொற்பமே. அதற்கு தண்டனை கொடுப்பது அநீதியானது. ஆனால் பட்டலந்த வதை முகாம், மத்திய வங்கி பணமோசடி தொடர்பில் வழக்கு தொடருங்கள் நாம் அதற்கு ஆதரவளிப்போம் எனக் கூறி ஏழை மக்களை வீதியில் இறக்க ஒன்று கூடிய அரசியல் போர் குற்றங்கள் தொடர்பில் தமிழர்கள் கேட்கும் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிப்பார்களா அத்தகைய குரல் எங்கும் எழவில்லை எழப்போவதுமில்லை.ஏனெனில் ஒன்று வர்க்க அரசியல்.இன்னொன்று சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்.ஒரு நாட்டில் சட்டம்,நீதி என்பன இனம், மொழி, சமயம் சார்ந்ததாக இருக்குமெனில் அங்கு இருள் கவ்வும் என்பது உண்மை. இலங்கையைப் பொறுத்தளவில் நாட்டின் அரசியல் யாப்பு இனம், சமயம், மொழி சார்ந்ததாகவும் அரச கட்டமைப்புகள் அதன் காவலாக திகளும் போது சமத்துவத்தை மக்கள் அனுபவிக்க முடியாது.அதனை மாற்ற முனையாது. சட்டம் அனைவருக்கும் சமம் என்பவர்கள் அரசியல் நாடகவாதிகளே. கடந்த 75 ஆண்டுகளாக இன அழிவுக்கும் இனப்படு கொலைக்கும் முகம் கொடுப்பது யாப்பு ரீதியிலான அரசியல் பாதுகாப்பு இன்னமையே காரணமாகும். அதனை முதுகெலும்பு இல்லா அரசியல் வாதிகள் நரி பரம்பரையினரே. அனைத்து மக்களின் இன,சமய, மொழி,கலை கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும் தனித்துவத்தையும் பாதுகாக்கும் போதே நாட்டல் நீதியும் சட்டமும் சமத்துவமாக அமையும். அதற்கு முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் சக்தி எழுச்சி ஒன்று மட்டுமே வழிவகுக்கும். - என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement