• Aug 28 2025

நீதிமன்றத்திற்கு அருகில் சட்டவிரோதமாக நடந்து கொண்டவர்கள் குறித்து விசாரணை

Chithra / Aug 27th 2025, 8:45 pm
image

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை நேற்று (26) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சட்டவிரோதமாக நடந்து கொண்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இன்று (27) கருத்து தெரிவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். 

"சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க நீதிமன்றமே தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, குற்றப் புலனாய்வு பிரிவு எதிர்காலத்தில் இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது," என்றும் எப்.யு. வுட்லர் கூறினார்.


நீதிமன்றத்திற்கு அருகில் சட்டவிரோதமாக நடந்து கொண்டவர்கள் குறித்து விசாரணை  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை நேற்று (26) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சட்டவிரோதமாக நடந்து கொண்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இன்று (27) கருத்து தெரிவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். "சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க நீதிமன்றமே தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி, குற்றப் புலனாய்வு பிரிவு எதிர்காலத்தில் இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது," என்றும் எப்.யு. வுட்லர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement