• Aug 28 2025

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் பெருந்தொகை பணம் கொள்ளை; 10 சந்தேகநபர்கள் கைது

Chithra / Aug 27th 2025, 9:17 pm
image

வெளிநாட்டிலிருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரின்  சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையிட்டப்பட்ட சம்பவம்  தொடர்பில் நேற்று 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  

வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் நெல்லியடி பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணயதாள்கள் உள்ளிட்ட பணத்தினையும் வைத்திருந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதையறிந்து, இந்த விடயம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 

குறித்த நபரின் வீட்டில் வேலை செய்யும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். 

விசாரணைகளின் போது,  இருவரும் வெளிநாட்டு பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக கொள்ளையிட்டதாகவும், 

அந்த பணத்தினை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வங்கியொன்றில் வெளிநாட்டு பணங்களை இலங்கை ரூபாவிற்கு மாற்றியதாகவும் கூறியுள்ளனர். 

இதனை தொடர்ந்து,  திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை, திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 08 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட பணத்தில் சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான பணத்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

ஏனைய பணத்தினை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் பெருந்தொகை பணம் கொள்ளை; 10 சந்தேகநபர்கள் கைது வெளிநாட்டிலிருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரின்  சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையிட்டப்பட்ட சம்பவம்  தொடர்பில் நேற்று 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் நெல்லியடி பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணயதாள்கள் உள்ளிட்ட பணத்தினையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதையறிந்து, இந்த விடயம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த நபரின் வீட்டில் வேலை செய்யும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் போது,  இருவரும் வெளிநாட்டு பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக கொள்ளையிட்டதாகவும், அந்த பணத்தினை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வங்கியொன்றில் வெளிநாட்டு பணங்களை இலங்கை ரூபாவிற்கு மாற்றியதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து,  திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை, திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 08 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட பணத்தில் சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான பணத்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஏனைய பணத்தினை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement