எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக, ரயில் மார்க்கங்களின் புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு மற்றும் தெற்கிற்கான போக்குவரத்தை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வடக்கு ரயில் மார்க்கத்தின் பல்வேறு இடங்களைப் புனரமைப்புப் பணிகளுக்காக இன்று முதல் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மஹவ - அநுராதபுரம் இடையிலான ரயில் மார்க்கம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மஹவ - ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கம் முற்றாக மூடப்படவுள்ளது.
மதவாச்சி - தலைமன்னார் ரயில் மார்க்கத்தின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, 'யாழ் ராணி' ரயில், இன்றைய தினம் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையும், 27ஆம் திகதி முதல் ஓமந்தை முதல் காங்கேசன்துறை வரையும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் புலத்திசி கடுகதி தொடருந்தும் 'உதயதேவி' தொடருந்தும் சேவையில் ஈடுபடவுள்ளன.
இந்தநிலையில், திருகோணமலை வரையான இரவுநேர அஞ்சல் ரயில் சேவையையும் ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார்.
ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு - தற்காலிகமாக மூடப்படும் பாதைகள் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக, ரயில் மார்க்கங்களின் புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு மற்றும் தெற்கிற்கான போக்குவரத்தை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், வடக்கு ரயில் மார்க்கத்தின் பல்வேறு இடங்களைப் புனரமைப்புப் பணிகளுக்காக இன்று முதல் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மஹவ - அநுராதபுரம் இடையிலான ரயில் மார்க்கம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மஹவ - ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கம் முற்றாக மூடப்படவுள்ளது. மதவாச்சி - தலைமன்னார் ரயில் மார்க்கத்தின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, 'யாழ் ராணி' ரயில், இன்றைய தினம் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையும், 27ஆம் திகதி முதல் ஓமந்தை முதல் காங்கேசன்துறை வரையும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் புலத்திசி கடுகதி தொடருந்தும் 'உதயதேவி' தொடருந்தும் சேவையில் ஈடுபடவுள்ளன. இந்தநிலையில், திருகோணமலை வரையான இரவுநேர அஞ்சல் ரயில் சேவையையும் ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார்.