• Sep 20 2024

பொது மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவித்தல் ! samugammedia

Tamil nila / Aug 11th 2023, 11:18 am
image

Advertisement

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக் காலமாக பெறுமதி வாய்ந்த நகை திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை உட்பட இதர பிரச்சினை உருவாகியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் சிலர் குழப்பங்களை வீணாக ஏற்படுத்தி இவ்வாறான திருட்டு சம்பவத்தில் குழுக்களாகவும் தனி நபராகவும் செயற்பட்டு வருகின்றனர்.

அண்மையில் கூட 8 பவுண் பெறுமதியுள்ள தங்க தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதியான நகைகள் தொடர்ச்சியாக பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் திருடப்பட்டுள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

எனவே வீதி ஓரங்கள் பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சந்தேகத்திற்கிடமாக இரவு பகல் வேளைகளில் யாராவது சந்தேகத்திற்கிடமாக நடமாடினால் உடனடியாக பொலிஸாருக்கு அறியத் தருமாறு கேட்டுள்ளனர்.

மேலும் பாண்டிருப்பு மருதமுனை பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களில் நகைகள் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்வதற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் துரித நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





பொது மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவித்தல் samugammedia பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக் காலமாக பெறுமதி வாய்ந்த நகை திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை உட்பட இதர பிரச்சினை உருவாகியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் சிலர் குழப்பங்களை வீணாக ஏற்படுத்தி இவ்வாறான திருட்டு சம்பவத்தில் குழுக்களாகவும் தனி நபராகவும் செயற்பட்டு வருகின்றனர்.அண்மையில் கூட 8 பவுண் பெறுமதியுள்ள தங்க தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதியான நகைகள் தொடர்ச்சியாக பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் திருடப்பட்டுள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.எனவே வீதி ஓரங்கள் பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் சந்தேகத்திற்கிடமாக இரவு பகல் வேளைகளில் யாராவது சந்தேகத்திற்கிடமாக நடமாடினால் உடனடியாக பொலிஸாருக்கு அறியத் தருமாறு கேட்டுள்ளனர்.மேலும் பாண்டிருப்பு மருதமுனை பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களில் நகைகள் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்வதற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் துரித நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement