• Jan 26 2025

அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் இறக்குமதி அரிசி!

Chithra / Dec 8th 2024, 3:05 pm
image

 

இறக்குமதி செய்யப்படும் அரிசி அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலான தொகை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன், அரிசி இருப்புகளை சுமந்து வரும் கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை நுகர்வோருக்கு உடனடியாக வழங்குவதற்காக துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் உள்ள அரிசி 04 மணித்தியாலங்களுக்குள் விடுவிக்கப்படும் என சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான சிவலி அருக்கொட கூறியுள்ளார்.

தற்போது உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அதிகபட்சமாக 70,000 மெட்ரிக் டன்களுக்கு உட்பட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் இறக்குமதி அரிசி  இறக்குமதி செய்யப்படும் அரிசி அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இவற்றில் பெரும்பாலான தொகை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன், அரிசி இருப்புகளை சுமந்து வரும் கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை நுகர்வோருக்கு உடனடியாக வழங்குவதற்காக துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் உள்ள அரிசி 04 மணித்தியாலங்களுக்குள் விடுவிக்கப்படும் என சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான சிவலி அருக்கொட கூறியுள்ளார்.தற்போது உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அதிகபட்சமாக 70,000 மெட்ரிக் டன்களுக்கு உட்பட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement