• Sep 19 2024

மன்னாரில், சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 9 பேர் கைது!

Tamil nila / Jan 6th 2023, 7:11 am
image

Advertisement

மன்னாரில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 09 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை மன்னார் அச்சங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.



குறித்த நடவடிக்கையின் மூலம் டைவிங் கியர், 01 டிங்கி படகு மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 168 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


பல்வேறு வகையான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்காக மன்னார்  தீவைச் சூழவுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.



கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


  கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில்  திணைக்கள அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


மன்னாரில், சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 9 பேர் கைது மன்னாரில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 09 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை மன்னார் அச்சங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.குறித்த நடவடிக்கையின் மூலம் டைவிங் கியர், 01 டிங்கி படகு மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 168 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.பல்வேறு வகையான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்காக மன்னார்  தீவைச் சூழவுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில்  திணைக்கள அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement