• Sep 20 2024

தேசிய அரசியலில் 'சமத்துவ மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாக அங்குரார்ப்பணம்!

Sharmi / Dec 5th 2022, 4:06 pm
image

Advertisement

மக்கள் கட்டுப்பாட்டிலுள்ள அரசியல் சக்தியாக இயங்கவிருக்கும் சமத்துவ முற்போக்கு முன்னணி அதன் அரசியல் அணியாக பரிணமிக்க இருக்கும் "சமத்துவ மக்கள் முன்னணி" எனும் கட்சி அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றையதினம் (04) ஞாயிற்றுக்கிழமை கல்முனை தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

சிரேஷ்ட வைத்தியர், சட்டத்தரணி வை.எல்.எம்.யூசுப் அவர்களை ஸ்தாபக தலைமையாகக் கொண்ட "சமத்துவ மக்கள் முன்னணி" இன்று(04) தொடக்கம் ஒர் அரசியல் கட்சியாக தனது செயற்பாட்டை ஆரம்பிப்பதாக சிரேஷ்ட வைத்தியர், சட்டத்தரணி வை.எல்.எம்.யூசுப் இங்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொறியியலாளர் எம்.எம். ஏ.சித்திக், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மெளலவி ஹபீபுள்ளாஹ், அஷ்-ஷெய்க் டாக்டர் உவைஸ் நளீமி, மென்பொருள் துறை ஆலோசகர் எம்.எம்.நஸ்மி,
அஷ்-ஷெய்க் ஹிதாயத்துள்ளாஹ் நளீமி மற்றும் ஆசிரியர் ஏ.பி.எம்.இர்பான் (எம்.ஏ) ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அத்துடன் இங்கு இலங்கையின் நாலாபுறத்திலிருந்தும் கலந்து கொண்ட கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தற்கால சூழலில் முஸ்லிம் அரசியலில் உள்ள இடைவெளியை நிரப்புவது மற்றும் மூவின சமூகங்களுக்குமான ஒற்றுமையான ஒரு இனமும் பாதிக்காத வகையிலான அரசியல் புதிய சிந்தனை நோக்கி பயணிக்கும் முக்கியத்துவம் தொடர்பாகவும் மிகவும் காத்திரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை சுட்டிக் காட்டத்தக்கது.




தேசிய அரசியலில் 'சமத்துவ மக்கள் முன்னணி' அரசியல் கட்சியாக அங்குரார்ப்பணம் மக்கள் கட்டுப்பாட்டிலுள்ள அரசியல் சக்தியாக இயங்கவிருக்கும் சமத்துவ முற்போக்கு முன்னணி அதன் அரசியல் அணியாக பரிணமிக்க இருக்கும் "சமத்துவ மக்கள் முன்னணி" எனும் கட்சி அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றையதினம் (04) ஞாயிற்றுக்கிழமை கல்முனை தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.சிரேஷ்ட வைத்தியர், சட்டத்தரணி வை.எல்.எம்.யூசுப் அவர்களை ஸ்தாபக தலைமையாகக் கொண்ட "சமத்துவ மக்கள் முன்னணி" இன்று(04) தொடக்கம் ஒர் அரசியல் கட்சியாக தனது செயற்பாட்டை ஆரம்பிப்பதாக சிரேஷ்ட வைத்தியர், சட்டத்தரணி வை.எல்.எம்.யூசுப் இங்கு தெரிவித்தார்.இந்நிகழ்வில் பொறியியலாளர் எம்.எம். ஏ.சித்திக், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மெளலவி ஹபீபுள்ளாஹ், அஷ்-ஷெய்க் டாக்டர் உவைஸ் நளீமி, மென்பொருள் துறை ஆலோசகர் எம்.எம்.நஸ்மி,அஷ்-ஷெய்க் ஹிதாயத்துள்ளாஹ் நளீமி மற்றும் ஆசிரியர் ஏ.பி.எம்.இர்பான் (எம்.ஏ) ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.அத்துடன் இங்கு இலங்கையின் நாலாபுறத்திலிருந்தும் கலந்து கொண்ட கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தற்கால சூழலில் முஸ்லிம் அரசியலில் உள்ள இடைவெளியை நிரப்புவது மற்றும் மூவின சமூகங்களுக்குமான ஒற்றுமையான ஒரு இனமும் பாதிக்காத வகையிலான அரசியல் புதிய சிந்தனை நோக்கி பயணிக்கும் முக்கியத்துவம் தொடர்பாகவும் மிகவும் காத்திரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை சுட்டிக் காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement