• Nov 12 2025

ஒரு வருடத்தில் இலங்கையின் 8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு 8 கோடி ரூபாய் செலவு

Chithra / Oct 6th 2025, 11:09 am
image

இலங்கையின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காகக் கடந்த 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 கோடியே ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 422 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் உள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்தத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி மாளிகைகள் யாழ்ப்பாணம், அநுராதபுரம், கண்டி, மஹியங்கனை, நுவரெலியா, கதிர்காமம், பெந்தோட்டை, மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. 

இந்த எட்டு மாளிகைகளிலும் 392 பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் 16 சிவில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் இலங்கையின் 8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு 8 கோடி ரூபாய் செலவு இலங்கையின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காகக் கடந்த 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 கோடியே ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 422 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் உள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்தத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகைகள் யாழ்ப்பாணம், அநுராதபுரம், கண்டி, மஹியங்கனை, நுவரெலியா, கதிர்காமம், பெந்தோட்டை, மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த எட்டு மாளிகைகளிலும் 392 பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் 16 சிவில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement