• Apr 19 2026

இலங்கையில் அடுத்தடுத்து உயிர்களை காவுகொள்ளும் நீர் - நேற்றும் இருவர் பலி

Chithra / Apr 19th 2026, 9:16 am
image

அனுராதபுரம் - தம்புத்தேகம நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நீராடும் பகுதியில் நேற்று பிற்பகல் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 


உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 30 வயதுடைய பெந்திவெவ மற்றும் திம்பிரிகஸ்கடவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


அவர்கள் நீராடச் சென்றிருந்தபோதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


சடலங்கள் மரண பரிசோதனைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


இதேவேளை, நேற்று (18) நண்பகல் அனுராதபுரம் திசாவெவவில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நபரொருவர் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். 


இவ்வாறு மீட்கப்பட்டவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது


அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்நிலையில் இலங்கையில் சித்திரைப் புத்தாண்டு விடுமுறைக்காலமான கடந்த 5 நாட்களில் மாத்திரம், நீர்நிலைகளில் நீராடச் சென்ற 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை தொடர்ந்தும் இவ்வாறான சம்பவம் பதிவாகி வருகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இலங்கையில் அடுத்தடுத்து உயிர்களை காவுகொள்ளும் நீர் - நேற்றும் இருவர் பலி அனுராதபுரம் - தம்புத்தேகம நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நீராடும் பகுதியில் நேற்று பிற்பகல் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 30 வயதுடைய பெந்திவெவ மற்றும் திம்பிரிகஸ்கடவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நீராடச் சென்றிருந்தபோதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலங்கள் மரண பரிசோதனைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, நேற்று (18) நண்பகல் அனுராதபுரம் திசாவெவவில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நபரொருவர் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கதுஅவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கையில் சித்திரைப் புத்தாண்டு விடுமுறைக்காலமான கடந்த 5 நாட்களில் மாத்திரம், நீர்நிலைகளில் நீராடச் சென்ற 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை தொடர்ந்தும் இவ்வாறான சம்பவம் பதிவாகி வருகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement