கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் 12 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்களும் இங்கு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றும் இடம்பெறவுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று அதிகாலை 4 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 45 காவல்துறை பிரிவுகளில் இந்த சுற்றிவளைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதற்கான அனைத்து கண்காணிப்பு பணிகளையும் 9 பிரதி காவல்துறைமா அதிபர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி, நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 11 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய ஹசீஷ், கேரள கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
கடந்த 24 மணிநேரத்தில் 2,121 பேர் கைது. நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்பு கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவர்களில் 12 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்களும் இங்கு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றும் இடம்பெறவுள்ளது.இந்த நடவடிக்கை நேற்று அதிகாலை 4 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் 45 காவல்துறை பிரிவுகளில் இந்த சுற்றிவளைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.அதற்கான அனைத்து கண்காணிப்பு பணிகளையும் 9 பிரதி காவல்துறைமா அதிபர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.இதன்படி, நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 11 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய ஹசீஷ், கேரள கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.