முல்லைத்தீவு உடையார்கட்டு கமநல சேவை பிரிவிற்குட்பட்ட விசுவமடு தொட்டியடி மேற்கு பகுதியில் வாழை தோட்டத்திற்குள் புகுந்த 04 யானைகளால் விலை மதிப்பான கப்பல் வாழை மரங்களை பிடுங்கி எறிந்தும், சேதப்படுத்தியும் நாசம் செய்துள்ளது.
நேற்றிரவு 07மணியளவில் குறித்த தோட்டத்துக்குள் புகுந்த 04யானைகள் அதிகாலை 2.00மணி வரை வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது எனவும், அரை ஏக்கர் வாழைத்திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட 480 பெறுமதி மிக்க வாழைகுட்டிகள் வழங்கப்பட்டு அதில் 225வாழைகளை பயன் பெரும் நேரத்தில் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் 04இலட்சம் ரூபாய் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சென்ற வருடமும் இதே போன்ற அழிவை சந்தித்துள்ளதாகவும் தோட்ட உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள யானை வேலி ஒன்றை அமைத்து தருமாறும் கேட்டுள்ளார்.
நள்ளிரவில் கோர தாண்டவமாடிய யானைகள். இலட்சங்களை இழந்த முல்லை விவசாயி.samugammedia முல்லைத்தீவு உடையார்கட்டு கமநல சேவை பிரிவிற்குட்பட்ட விசுவமடு தொட்டியடி மேற்கு பகுதியில் வாழை தோட்டத்திற்குள் புகுந்த 04 யானைகளால் விலை மதிப்பான கப்பல் வாழை மரங்களை பிடுங்கி எறிந்தும், சேதப்படுத்தியும் நாசம் செய்துள்ளது.நேற்றிரவு 07மணியளவில் குறித்த தோட்டத்துக்குள் புகுந்த 04யானைகள் அதிகாலை 2.00மணி வரை வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது எனவும், அரை ஏக்கர் வாழைத்திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட 480 பெறுமதி மிக்க வாழைகுட்டிகள் வழங்கப்பட்டு அதில் 225வாழைகளை பயன் பெரும் நேரத்தில் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவத்தில் 04இலட்சம் ரூபாய் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சென்ற வருடமும் இதே போன்ற அழிவை சந்தித்துள்ளதாகவும் தோட்ட உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.மேலும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள யானை வேலி ஒன்றை அமைத்து தருமாறும் கேட்டுள்ளார்.