• Sep 08 2024

வவுனியாவில் உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்து வைப்பு..!

Sharmi / Jul 16th 2024, 5:18 pm
image

Advertisement

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்திக்கு அண்மையில் இன்று(16)  திறந்து வைக்கப்பட்டது.

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  முதன்மை அதிதியாக கலந்து கொண்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உமாமகேஸ்வரனின் உருவச் சிலையினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழீ்ழ விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் முக்கியஸ்தர்கள்,பொது அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்து வைப்பு. தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்திக்கு அண்மையில் இன்று(16)  திறந்து வைக்கப்பட்டது.தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  முதன்மை அதிதியாக கலந்து கொண்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உமாமகேஸ்வரனின் உருவச் சிலையினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில் தமிழீ்ழ விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் முக்கியஸ்தர்கள்,பொது அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement