• Sep 20 2024

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் அதிகரித்துள்ள கொள்ளை சம்பவங்கள்!

Tamil nila / Feb 11th 2023, 9:35 pm
image

Advertisement

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், நிலநடுக்தின் நடுவே கொள்ளை மற்றும் பிற குற்றச்சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இவ்வாறான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளோம். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அரசின் கரம் தங்கள் மீது உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 


அதேநேரம் துருக்கியில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மக்கள் வசிக்க தகுதியற்றது எனத் தெரிவித்த அவர், அதிகாரிகள் விரைவில் மறுக்கட்டமைப்பு பணியை தொடங்குவார்கள் எனவும் கூறினார். 

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் அதிகரித்துள்ள கொள்ளை சம்பவங்கள் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், நிலநடுக்தின் நடுவே கொள்ளை மற்றும் பிற குற்றச்சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளோம். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அரசின் கரம் தங்கள் மீது உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதேநேரம் துருக்கியில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மக்கள் வசிக்க தகுதியற்றது எனத் தெரிவித்த அவர், அதிகாரிகள் விரைவில் மறுக்கட்டமைப்பு பணியை தொடங்குவார்கள் எனவும் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement