• Jan 22 2025

சீரற்ற வானிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு - இருவர் உயிரிழப்பு

Chithra / Jan 21st 2025, 9:20 am
image

 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்ததுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.



சீரற்ற வானிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு - இருவர் உயிரிழப்பு  நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்ததுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வலப்பனையில் இருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement