• Nov 30 2024

திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை - அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்!

Tamil nila / Nov 29th 2024, 10:24 pm
image

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டு வரும் சீரற்ற காலநிலை மாற்றத்தினால் வெள்ளபாதிப்பு மற்றும் அனர்த்தம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமானது இன்று (29) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையுரையுடன் இவ்விசேட கூட்டமானது ஆரம்பமானது.


மாவட்டத்தில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை, அனர்த்தத்தைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மோசமான வானிலையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தடுப்பதற்கான திட்டமிடல் உள்ளிட்டவை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதன் போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா, கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர்  உப்பாலி பன்னலகே, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க,  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன, பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை - அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் திருகோணமலை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டு வரும் சீரற்ற காலநிலை மாற்றத்தினால் வெள்ளபாதிப்பு மற்றும் அனர்த்தம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமானது இன்று (29) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையுரையுடன் இவ்விசேட கூட்டமானது ஆரம்பமானது.மாவட்டத்தில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை, அனர்த்தத்தைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மோசமான வானிலையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தடுப்பதற்கான திட்டமிடல் உள்ளிட்டவை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.இதன் போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா, கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர்  உப்பாலி பன்னலகே, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க,  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன, பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement