• Jul 21 2025

சடுதியாக அதிகரித்த கோழி இறைச்சியின் விலை!

shanuja / Jul 20th 2025, 9:36 pm
image

கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். 

 

அதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,300 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். 

 

கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்களில் 1,100 ரூபா, 1,200 என பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


நிர்ணயிக்கப்பட்ட விலையில் தற்போது கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதில்லை. எனவே, கோழி இறைச்சிக்கு உரிய விலையை நிர்ணயித்து விற்பனை செய்வதுடன், விலையையும் குறைக்குமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

அத்துடன், இந்த விலை உயர்வு குறித்து இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகரவிடம் விசாரித்த போது, வார இறுதியில் கோழி இறைச்சியின் விலை ஓரளவு அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளார்.

சடுதியாக அதிகரித்த கோழி இறைச்சியின் விலை கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.  அதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,300 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.  கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்களில் 1,100 ரூபா, 1,200 என பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையில் தற்போது கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதில்லை. எனவே, கோழி இறைச்சிக்கு உரிய விலையை நிர்ணயித்து விற்பனை செய்வதுடன், விலையையும் குறைக்குமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அத்துடன், இந்த விலை உயர்வு குறித்து இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகரவிடம் விசாரித்த போது, வார இறுதியில் கோழி இறைச்சியின் விலை ஓரளவு அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement