• Mar 15 2025

நாட்டில் உணவு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Chithra / Mar 15th 2025, 9:31 am
image

 

பிறப்பு விகிதம் குறைந்துவரும் அதேவேளையில், உணவு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை நாட்டிற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக சுகாதார  அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு நிர்வாக பொறிமுறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன், தற்போதைய உணவுப் பாதுகாப்பு சவால்கள், தீர்வுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து பங்குதாரர்களிடையே புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நேற்று கொழும்பு மாரியட் கோர்ட்யார்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உணவுப் பாதுகாப்பு குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்ப்பது மிகவும் முக்கியமானதாகும்.

இச்செயல் முறையை உற்பத்தி, புள்ளிவிவரங்கள், தரவு மற்றும் ஒழுங்குமுறை ஆகிய அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும். 

மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் உணவுப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளன. 

ஆகையால் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுவது மிகவும் முக்கியம். 

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), ஐரோப்பிய ஒன்றியம் (EU), நிதியுதவி அளிக்கும் வேளாண் உணவுத்துறை திட்டத்திற்கான சிறந்த தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள் (BESPA-FOOD) ஆகிய நிறுவனங்களும் நாட்டில் உணவுப் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான அனைத்து ஆதரவுகளையும் வழங்க தயாராக உள்ளன என்றார்.

நாட்டில் உணவு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு  பிறப்பு விகிதம் குறைந்துவரும் அதேவேளையில், உணவு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை நாட்டிற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக சுகாதார  அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இலங்கையின் உணவுப் பாதுகாப்பு நிர்வாக பொறிமுறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன், தற்போதைய உணவுப் பாதுகாப்பு சவால்கள், தீர்வுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து பங்குதாரர்களிடையே புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நேற்று கொழும்பு மாரியட் கோர்ட்யார்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.உணவுப் பாதுகாப்பு குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்ப்பது மிகவும் முக்கியமானதாகும்.இச்செயல் முறையை உற்பத்தி, புள்ளிவிவரங்கள், தரவு மற்றும் ஒழுங்குமுறை ஆகிய அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும். மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் உணவுப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளன. ஆகையால் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுவது மிகவும் முக்கியம். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), ஐரோப்பிய ஒன்றியம் (EU), நிதியுதவி அளிக்கும் வேளாண் உணவுத்துறை திட்டத்திற்கான சிறந்த தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள் (BESPA-FOOD) ஆகிய நிறுவனங்களும் நாட்டில் உணவுப் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான அனைத்து ஆதரவுகளையும் வழங்க தயாராக உள்ளன என்றார்.

Advertisement

Advertisement

Advertisement